சனி, 18 பிப்ரவரி, 2017

பார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை சீர் போற்றி என்றும் பண் பாடு…

தி.பி-2048 (கி.பி.2017)                       மாசித்திங்கள்(பிப்ரவரி)

தேன்:1                                                    துளி:2                                                              
                    
      பார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை
      சீர்  போற்றி    என்றும் பண் பாடு………

உயிர் தமிழ் எனதென்று உரக்கச் சொல்லும் இனிய உள்ளங்களுக்கு,

              உயர் வணக்கம்.

      காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர்களால் சென்ற திங்களில்  தொடங்கப்பெற்ற இத்தேமதுரம் தெவிட்டாத அமுத ஊற்றாய் உங்கள்  பார்வைக்குக் கிடைத்திருக்கக் கூடும் என்று நம்புகிறோம். தைத் திங்களில் நாங்களிட்ட வித்தினை விளைச்சலாக்கும் முயற்சியில்  மகத்துவமான மாசியில் இந்த மதுரம் வெளிவருகிறது.
        தமிழ் மாதங்களில் மாசி மாதம் மேன்மையானது. தை மாதத்தில் வழி காணும் மக்கள் மாசியில் வாழ்வின் ஒளி காண்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும், பெருங்கடற் கரைகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆன்மீகப் பெரியோர்கள் கொண்டாடும் மாதம் மாசி. இறைவனின் அருளாசி பெற மாசிமகத்தில் கடலாடுவது தமிழர் பண்பாடு.
         சங்கப் பனுவல்களை எல்லாம் முயற்சியின் பிறப்பிடமாய் நின்று நிலைப்படுத்திய நம் தமிழ்த்தாத்தா .வே.சா  அவர்கள் பிறந்த மாசற்ற மாதம் மாசி. கிழக்கு திசையில் புதிய பல விடியல்களைத் தந்த எழுச்சிமிகு கவிஞர் தாராபாரதியைத் தந்தது மாசி மாதம். மாசியின் மகத்தில் பிறந்தவர் அகிலத்தை ஆள முடியும் என்னும் ஆழ் நம்பிக்கையை மனதின் மையத்தில் வீழச் செய்த மாதம் மாசி.

         அருட்செறிவும், அறிவுச்செறிவும் நிறைந்த இந்த மாசியில், பெரும்புயலாய் வீசி வரும் எங்கள் கருத்து மண்டலம் உங்கள் கணிணித் திரையில் மையம் கொள்ளும் என்னும் நம்பிக்கையோடு…..

                                                   ஆசிரியர் குழு,
                                    தேமதுரம் - மின்னிதழ்




ஆசிரியா்
 நெ.கிருஷ்ணவேணி
இணையாசிரியா்
மு.செண்பகவள்ளி
துணையாசிரியா்

ஆ.அருள்சாமி 

ஆசிரியா்குழு

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கா.சுபா 

பெ.குபேந்திரன் 

.சகுந்தலா 

மீனாட்சி



கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக