வியாழன், 16 பிப்ரவரி, 2017

தமிழாயிரம் அதிகாரம்-1


1. திருச்சி மாவட்டம் திருவளா் குடியிலுள்ள திருவள்ளுவா் இந்நூலை தவச்சாலை சனவரி 2013 இல் வெளியிட்டுள்ளது. தமிழ் என்பது பல பொருள் ஒருசொல்அது தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழா் பண்பாடு, தமிழா் நாகரிகம், தமிழா் கலைகள் தமிழா் போர் முறை, தமிழா் அரசு, தமிழா் அகம் புறமாம் வாழ்வியல் ஆகிய அனைத்தும் சுட்டும் அமிழ்தச் சொல்தமிழில் முதற்பா வெண்பா வெண்பாவில் முதற்பா குறுவெண்பாட்டு எனப்படும் குறட்பா
2. ஆற்றல் சால் பல் நூல்களை எழுதியும், தொகுத்தும், தமிழ் உலகிற்கு அளித்த இரா.இளங்குமரனார் அவர்கள் குறள் வெண்பா போன்ற அமைப்பில் தமிழைப் பற்றிய  பொருண்மைகளைக் கொண்ட தமது ஆயிரம் குறட்பாக்களை தமிழாயிரம் என்னும் தலைப்பிலான நூலில் எழுதியுள்ளார்.
3. அந்நூலில் இருந்து முதல் அதிகாரமானதமிழ்ப் பழமை என்னும் தலைப்பில் அமைந்த குறட்பாக்கள் இவை.

தமிழ்ப்பழமை
1. கதிர்ப்பிறப்புக் காட்டும் கலைத்தமிழைக் கண்போல்
  மதிக்கும் மதியே மதி.
2. மதியோடு தென்றல் மகிழ்ந்து குலவக்
  குதித்ததே தண்டமிழ் கூறு
3. கூறும் மலைதோன்றிக் கூடாரக் காடுதவழ்
  பேறுடையாள் பேணு தமிழ்.
4. தமிழென்ன எண்ணேல்; தனிவான் பொழிந்த
  அமிழ்தென்ன நன்றாய் அறி!
5. அறிந்தால்தான்கற்றோன்றி மண்தோன்றாக் காலக்
  குறிப்பறிவோம் கொண்டிடுவோம் கோள்.
6. கோளழிக்கு முன்னா்க் குமரித்தாய் பெற்றதமிழ்
  நாளென்றே நல்லுகை நாடு.
7. நாடெல்லாம் கல்லாகக் காடாகக் காட்சிதந்த
  பீடு நாள் அன்னை பிறப்பு.
8. பிறப்பவள் உற்றநாள் எத்தாய் பிறந்தாள்
  சிறப்பால் முதற்றாயாள் சீர்
9. சீர்த்த மொழிகள் செழிக்கப் பிறந்தவளே
  சோ்த்த கொடையாம் தெளி.
10. தெளிந்தால் தமிழ்ப்பழமை தோ்வாய்! களிப்பாய்!

   நெளியாய் புழுவாக நீ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக