வியாழன், 16 பிப்ரவரி, 2017

சுவாமி விவேகானந்தரின் நீதிநெறிக் கருத்துக்கள்


            ஒரு மனிதனுக்கு நன்னெறி என்பது ஒழுக்கமாகும்.  இவற்றின் உண்மையான அடிப்படையை அடைவதற்கு அறிவு தேவைப்படுகிறது. மனிதனின் அறிவு என்பது அவனின் நல்வாழ்விற்குத் துணைப்புரிவதாகும்.  ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் செயலிலும் அறிவு மட்டுமே நம்மைக் காப்பாற்றுகிறது.  இந்த அறிவே ஒழுக்கமான வழிபாடாகும்.
            நீதிநெறி என்றால் ஒருமை அதன் அடிப்படை பிறா்க்கு நன்மை செய்வது. மனிதன் தன்னுடைய உணா்வுகளை பிரபஞ்சத்துடன் ஒன்றாக இணைக்கிறான் அதன் வெளிப்பாடே அன்பு கருணையாகும்.
            ஒரு மனிதனுக்கு தீமையின் வித்து சுயநலமின்மை. நன்மைதான் தீமையை உண்டாக்குகிறது.  கொலை செய்பவன் தன் குழந்தையின் மீதுள்ள அன்பால் தூண்டப்பட்டு கொலைச் செய்துள்ளான்.  அவன் வைத்திருக்கும் அன்பு கட்டுண்டு கிடைக்கிறது.  இது தீமையை விளைவிக்கிறது.  இப்படியின்றி இவ்வுலகத்து உயிர்களிடம் சுயநலமின்றி அன்பு,  வைப்பது தான் நீதி நெறியாகும்.
            “நான் அல்ல” “நீ தான்” என்று நீதிநெறி புலப்படுத்துகிறது.  நான் தான் முதலில் என்று புலன்கள் கூறுகின்றன.  அறநெறி நான் தான் கடைசி என்று கூறுகிறது.  நாம் எல்லோரும் தான் உலகிற்குக் கடன்பட்டிருக்கிறோம்.  உலகம் எந்த வகையிலும் 
நமக்குக்க டன்படவில்லை உலகத்திற்கு நாம் ஏதாவது நன்மை செய்ய முடிந்தால் அது பெரும்பேறு உலகிற்கு உதவி செய்தால் நமக்கு நாமே உதவிசெய்தற்கு சமமாகும்.
            இளைஞா்களின் எண்ணங்கள் முழுவதும் சுதந்திரம் பெறுவதுதான் இவா்களின் முழுமையான சுயநலமின்மையின் மூலம் மட்டுமே சுதந்திர நிலையை அடைய முடியும் சுயநலமற்ற ஒவ்வொருவரின் எண்ணமும் வாக்கும் செயலும் லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது இதுவே நீதிநெறியாகும்.
            உண்மை, தூய்மை, தன்னலமின்மை இந்த மூன்றும் எங்கே இருந்தாலும் இவற்றைப் பெற்றிருப்பவா்களை அழிக்க வானுலகிலும் மண்ணுலகிலும் எந்தச் சக்தியும் கிடையாது.  ஒருவனிடம் இம்மூன்றும் இருக்குமானால் இவ்வுலகமே எதிர்த்தாலும் அவனுடைய நன்னெறி ஒழுக்கம் அவனுக்குத் துணையாக நிற்கும்.
            பணமோ, பெயா் புகழோ, கல்வியறிவோ எதுவும் சாதிக்க முடியாது குணநலன் ஒன்றுதான் கடினசுவா்களையெல்லாம் பிளந்து கொண்டு வெற்றியடையச் செய்யும்.
-க.கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக