வியாழன், 16 பிப்ரவரி, 2017

புதுமைப் பெண்கள் பூமிக்குக் கண்கள்


அன்பினுருவாய்ப் பெண்...
அமைதியினுருவாய்ப் பெண்...
பண்பினுருவாய்ப் பெண்...
பாசத்தினுருவாய்ப் பெண்...
அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பதற் கென்ற பொழுது
பட்டங்கள் ஆளப் பாரினில் உயர்ந்தனா்...
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்....
பாரதம் போற்றச் சாதனைப் படைத்தனர்
விண்ணைத் தொட்ட சாவ்லா சுனிதா
விண்ணிலும் தியாகச் செம்மலாய் அன்னைதெரசா
வீரத்தின் நங்கையாய் வேலுநாச்சியார்
வீறுகொண்ட வீரப் பெண்ணாய் கிரண்பேடி
விளையாட்டில் விதை விதைத்தாள் சானியா
விளையாட்டில் மரக் கிளையானாள் ஜோஸ்னா
தற்காப்புக்கலை பத்மஸ்ரீ விருதுபெற்றாள் களரிகலை
தன்னைப் பாதுகாக்கும் திறம் பெற்ற பெண்ணானாள்
தமிழ் வளர்க்க அதியமான் கனிஈந்தான் ஔவையிடம்
தமிழ் வளர்க்கும் அறிவுப் பெண்கள் இலக்கியக்கலையில்
அறிவியலின் கண் திறந்தாள் முத்துலெட்சுமி
அறவழியில் நாட்டின்கண் திறக்கும் நந்தினி
சனநாயகத்தைக் கட்டிக்காத்த  ஜெயலலிதா
சனாதிபதியிடம் விருதுபெற தமிழ்ப்பாவை
நாட்டின் அறிவுக்கண்ணாக விளங்கும் எம்குலப்பெண்கள்
நாடாளப் பிறந்த புதுமைப் பெண்கள் - அப்
புதுமைப் பெண்களே பூமிக்குக் கண்கள்

                                                                                                                                                                                                                                         -தே.தீபா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக