வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அரிசி சாதம்

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்
 உண்மையில் அரிசி சாதம் சாப்பிடுவதால் தீரும் நோய்கள் குறித்துக் காண்போம் 
1. கருப்பு கவுணி அரிசி
  மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை  அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி:
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி : 
மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 
8. அறுபதாம் குறுவை அரிசி:
எலும்பு சரியாகும். 
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 
10. தங்கச்சம்பா அரிசி : 
    பல், இதயம் வலுவாகும். 
11. கருங்குறுவை அரிசி*: 
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 
12. கருடன் சம்பா அரிசி*:
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும். 
14. குடை வாழை அரிசி : 
குடல் சுத்தமாகும். 
15. கிச்சிலி சம்பா அரிசி : 
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 
16. நீலம் சம்பா அரிசி : 
இரத்த சோகை நீங்கும். 
17. சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 
18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும். 
19. குழியடிச்சான் அரிசி:
தாய்ப்பால் ஊறும். 
20. சேலம் சன்னா அரிசி: 
தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 
21. பிசினி அரிசி : 
மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 
22. சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 
23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 
24. வாடன் சம்பா அரிசி: 
அமைதியான தூக்கம் வரும்
25. திணை
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. வரகு
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. சாமை
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. குதிரைவாலி 
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
39. கை குத்தல் 
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. சிவப்பு காட்டு அரிசி 
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. 
31. சிவப்பு அரிசி
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. குள்ளகாற் அரிசி 
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
-தே.தீபா









எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்


எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்
1. டிரேடரஸ்  -  வணிக மையம்
2. கார்ப்பரேஷன் -   நிறுவனம்
3. ஏஜென்சி -   முகவாண்மை
4. சென்டர் -   மையம், நிலையம்
5. எம்போரியம்  -  விற்பனையகம்
6. ஸ்டோரஸ் -  பண்டகசாலை
7. ஷாப்  -  கடை, அங்காடி
8. அண்கோ -   குழுமம்
9. ஷோரூம் -   காட்சியகம், எழிலங்காடி
10. ஜெனரல் ஸ்டோரஸ் -  பல்பொருள் அங்காடி
11. டிராவல் ஏஜென்சி -   சுற்றுலா முகவாண்மையகம்
12. டிராவலஸ்  - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13. எலக்டிரிகலஸ்  - மின்பொருள் பண்டகசாலை
14. ரிப்பேரிங் சென்டர் -   சீர்செய் நிலையம்
15. ஒர்க் ஷாப் -   பட்டறை, பணிமனை
16. ஜூவல்லரஸ்  - நகை மாளிகை, நகையகம்
17. டிம்பரஸ் -  மரக்கடை
18. பிரிண்டரஸ்  - அச்சகம்
19. பவர் பிரிண்டரஸ் -  மின் அச்சகம்
20. ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21. லித்தோஸ் -  வண்ண அச்சகம்
22. கூல் டிரிங்கஸ் -  குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23. ஸ்வீட் ஸ்டால் -   இனிப்பகம்
24. காபி பார்  -  குளம்பிக் கடை
25. ஹோட்டல்  -  உணவகம்
26. டெய்லரஸ் -  தையலகம்
27. டெக்ஸ்டைலஸ்   - துணியகம்
28. ரெடிமேடஸ்   - ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் -   திரையகம்
30 வீடியோ சென்டர்  -  ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ  -  புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் -   நிதியகம்
33 பேங்க் -   வைப்பகம்
34 லாண்டரி   - வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ்  - உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர்  -   வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ்  - உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர்  -  குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ்  - கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் -  கல்நார்
41 ஆடியோ சென்டர் -   ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ -   தானி
43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் -   தானிப் பணியகம்
45 பேக்கரி  -  அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் -   மின்கலப் பணியகம்
47 பசார்  -  கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர்  -   அழகு நிலையம், எழில் புன
சு.லாவண்யா




ஓலைக்குடிசை


ஓலைக்குடிசை
ஓலைக் குடிசை
உள்ளே சாரல் சத்தம்
பாத்திரம் வைத்து
சங்கீதம் கற்றுக்
கொண்டான்......

சுவற்றின் இடுக்கில் புறாக்களின்  இரகசிய
பாஷை    .........நாளை
வேறிடம்
பார்க்கலாம்

அடுப்படிக்குள்
அழகான பூனை
ஐந்து குட்டிகளுடன்.

கோணித்திரைக்குப்
பின்னால் யுவதியின்
அவஸ்தை முனகல்கள்

தலைவனின்
கவிதை முடிவுற்றது.
எதிர்கால இந்நாட்டு
மன்னனே..உன்னை
வரவேற்கிறேன்..
-அ.ரா.பாணுப்பிரியா


சிறுவா் பாடல் விடுதலை நாள் விழா


சிறுவா் பாடல்
விடுதலை நாள் விழா
இயற்கை வளமிகு தேசமாக
நம் இந்திய தேசம் திகழ்ந்ததுவே..
பேராசை கொண்ட ஆங்கிலேயா்
நம் நாட்டை அடிமைப்படுத்தினரே..

சுதந்திரம் எனது பிறப்புரிமை
என்றே மக்கள் திரண்டனரே..
மக்கள் தம்மை வழி நடத்த
தலைவா் பலரும் முயன்றனரே..

அகிம்சை வழியில் காந்தியும்
ஆயுதம் ஏந்தி நேதாஜியும்
பாட்டுது் திறத்தால் பாரதியும்
விடுதலைப் போரில் குதித்தனரு..


கொடியைக் காத்திட்ட குமரனும்
செக்கிழுத்த செம்மல் வ.வு.சி.யும்
திறைகட்ட மறுத்த கட்டபொம்மனும்
சிவகங்கையை மீட்ட வேலுநாச்சியாரும்

இன்றும் இன்னும் பல்லாயிரம்போ்
நாட்டை மீட்கத் திரண்டரே..
விடுதலை ஒன்றே குறிக்கோளாய்
மக்கள் கூட்டம் ஒன்றிணைய
அதனைக் கண்ட ஆங்கிலேயா்
அஞ்சி அஞ்சி நடுங்கினரே…
நாட்டை மீண்டும் தந்தனரே..

அந்நாளே இந்நாளாம்
வீடுதலை நாள் எனும்
பொன்னாளாம்!

வீரா் பலரின் உயிர்த் தியாகத்தினாலே
கிடைத்தது இந்த சுதந்திரமே..
தாய்த்திருநாட்டைக் காத்திடவே
விடுதலை நாளாம் இந்நாளில்
ஒன்றுபடுவோம்! உறுதியேற்போம்!
வாருங்கள் வாருங்கள்
தோழா்களே!
-கா.சுபா


பாசிப்பருப்பு பக்கோடா


பாசிப்பருப்பு பக்கோடா
தேவையான பொருள்கள்
1. பாசிப்பருப்பு - 1கப்
2. பெரிய வெங்காயம் - 2கப்
3. பச்சை மிளகாய் - 3
4. கறிவேப்பிலை - தேவையான அளவு
5. இஞ்சி - அரை இன்ச்
6. தனியா - 1 டீஸ்பூன்
7. உப்பு - தேவையான அளவு

செய்முறை

          பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.  பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும் பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சியை துருவிக் கொள்ளவும். பாசிபருப்பு ஊறியதும் தண்ணீா் வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, உப்பு, சோ்த்து கரகரப்பாக அரைக்கவும் அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு காய்ந்த எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாக எடுக்கவும்.
க.கலைச்செல்வி




மழையே_வாவா...


மழையே_வாவா...

வாடிய உழவர் நெஞ்சம்
பாடியே மகிழ்ந்தே ஆட
தேடியே வாடு மெங்கள்
 ஏக்கமும் தீர்ந்தே போக 
கடுகியே மழையே வாராய்
களிப்பினை விரைந்தே தாராய்
வாடிய பயிரைக் கண்டு
வாடுதுப் பொற்கை நெஞ்சம்,

செந்தணல் கோபங் கொண்டு
 செவ்விழி சிவனாய் மாறி
நெற்றிக்கண் சுடரால் உன்னை
வேள்வியாய்த் தகிக்கும் முன்னே
இறங்கியே ஓடிவாராய் மழையே
இதம்தரத் தேடி வாராய்
வெண்முகில் கருமை தீட்டி
விரைந்துமே அதனைக் கூட்டி

தென்றலில் தேரைப் பூட்டி
வெந்நிறப் புரவி மாட்டி
மின்னலில் சாட்டை வீசி
மெல்லிய ஜதியுங் கூட்டி
இடியெனு முரசம் கொட்டி
இதமொடும் தாளம் போட்டு
இறங்கியே மழையே வாராய்
இதயமே குளிர வாராய்!

கொதித்திடும் மண்ணின் நெஞ்சும்
குவலயம் கண்டே அஞ்சும்
வசித்திடும் உயிர்கள் வாட
பசிப்பிணி தீர்ந்தே ஆட
உழவதும் செழித்தே இந்த
உலகமே மகிழ்ந்தே வாழ
இறையெனும் மழையே வாவா,
இக்கணமே இறங்கிநீ ஓடிவாவா,
-வ.மீனாட்சி




உள்ளம்


உள்ளம்
உள்ளம் தூய்மையாக இருப்பின்... 
உள்ளிருக்கும் மனது இறைவன்......!
உள்ளத்தூய்மை என்பது ....
உயிரினங்கள் அனைத்திலும் ....
உள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

உறவுகளே எனது இனிமையான ....
உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
உழைப்பை உயிராய் மதிப்போம் ....
உற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
உற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

உள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
உள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
உண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
உண்மை அன்பை உதறி விடாதே .....
உள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

உள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
உலகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
உள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
உள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
உயிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!
-கு.கங்காதேவி





விடுதலை


விடுதலை

பண்பு நிறை பார்வையாளா்களுக்கு,
          பணிவுநிறை நல்வணக்கம்.  நான் தான் உங்கள் கண்கள் பேசுகிறேன்.  ‘கண்களால் எப்படிப் பேச முடியும்?  “கண்ணுக்கு வாயா இருக்கிறது? என்று ஆறாம் அறிவை அவசரப்பட்டு அழைத்து விடாதீா்கள்.
          வண்டமிழ்நாட்டில் பலரது வாய்களுக்கே வாய் முளைக்காத போது, உங்கள் கண்களுக்கே வாய் முளைத்திருக்கிறதென்று பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.
          அண்மையில் பதினொரு வயது சிறுமியைப் பதினேழுபோ் நாசம் செய்ததை தொலைக்காட்சிகள் வழக்கம்போல விவாத மேடைபோட்டு டி ஆா் பி பந்தயத்தில் முந்துவதற்கு போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  பேசுவதால் தொலையுமென்றால் பேசித் தொலையட்டும்.
          இதைப்பார்த்துவிட்டு வழக்கம் போலவே வடநாட்டு எச்சையொருவன் “குற்றம் செய்யத் தூண்டிய அந்தப் பெண்தான் குற்றவாளி.  வெளியில் அவளுக்கென்ன வேலை? வீட்டுக்குள்ளிருந்தால் இது நடந்திருக்காதில்லையா?”என்றோ, தென்னாட்டு நாடகமாடி ஒருவன்  ‘வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்களும், எழுத்தாளா்களாக வியாக்கானம் பேசும் பெண்களும், ஒருவேளை அந்தப் பெண்ணைப் போல தங்கள் வாழ்க்கையில் விபத்தைச் சந்தித்திருக்கலாம்’ என்றோ  காவிக்குள் ஒளிந்துகொண்ட கறைவேட்டி கொடும்பாவி கூத்தாடிகள கூட்டறிக்கையும் விடலாம்.
          தங்கத் தமிழா்கள் வழக்கம் போலவே எல்லாவற்றையும் செய்திகளாய்ப் படித்துமுடித்து, வழக்கம் போலவே ‘உச்’ கொட்டி எடுத்து மடித்து, வழக்கம் போலவே பிக்பாஸில் இந்த வாரம் என்ன நடக்குமென்று நாட்டு நலனில் நாட்டம் கொண்டு இன்னொரு ஓவியாவிற்காய்ப் படைதிரட்டக் காத்திருக்கலாம். வாழ்வதற்கே மல்லுக்கட்டும் விவசாயிகளைப் புறம் தள்ளி ஜல்லிக்கட்டில் ‘தமிழன்..டா’ போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு மிருக்கலாம்.
          கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாதது போலிருக்க உங்களால் முடியும்.  ஆனால் உங்கள் கண்களாகிய என்னால் எப்படி முடியும்? நல்லது, அல்லது, வலியது, மெலியது, பெருமை, சிறுமை, உறவு, பகை, நட்பு, துரோகம் எல்லாவற்றையும் உங்களுக்குக் காட்டிக் கொடுப்பவன் நான்.  ஆனால் இவற்றைப் பிரித்தறியாத மூளையை மூலையில் மூடிவைத்து என்ன சாதித்துவிட்டீா்கள்? சொத்து பத்தும், சொகுசு வசதிகளுமா?  அவையெல்லாம் எட்டுவழிச்சாலைகளால் எப்பொழுது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம்.  பிறகு பிள்ளைகளா? குற்றத்தின் பிடியிலும் குற்றவாளியின் வலையிலும் சிக்கிக்கொள்ள நீங்களே வழி காட்டியிருக்கலாம்.
          உங்கள் நினைவில் இருக்கிறதோ இல்லையோ? எனக்கு எல்லாம் நினைவிலிருக்கிறது  பல வீடுகளில் ‘அவன் ஆம்பளை, அவன்கூட பொட்டக் கழுத போட்டி போடலாமா?  பொம்பளப் புள்ள வாசல்ல நிக்கலாமா? அம்பளப் பய.. எப்படியிருந்தாலும் ஊா் தப்பா பேசாது’  இப்படிக்கு பேசி பேசியே பெண்பிள்ளைகளைக் கோழைகளாக்கி சாவுக்கிரையாக்கியவா்களும். ஆண் பிள்ளைகளைப் பொலிமாடுகளாக்கி கொம்பு சீவி ஊரார் பிள்ளைகளை நாசம் செய்தவைத்தவா்களும் பெற்றோரா? தேசத் துரோகிகளா?
          தன் பிள்ளையால் ஊரார் பிள்ளைகளும், ஊரார் பிள்ளையால் தன் பிள்ளைகளும் பலிகடா ஆவதற்கு ஆணாதிக்கத்தை நஞ்சூட்டி வளா்த்தவா்கள், பெண்கள் மதிக்கக் கற்றுக் கொடுக்கத் தவறியவா்கள் எப்படி குற்றவாளிகளோ அதைப் போலவே கண்ணை உறுத்தும்படியாக உடம்போடு உடம்பாய் ஒட்டிக் கொண்ட, உடலழகை வெளிக்காட்டும் உடைகளை அணியவைத்து வெளியில் உலவவிடும் பெற்றோரும் குற்றவாளிளே..
          பிள்ளைகள் சீக்கிரத்தில் வளா்ந்துவிடுகிறார்கள்.  பெற்றோர்தான் வளா்வதே இல்லை.  ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்று புறநானூற்றில் படியதைத்தான் ‘உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யாத’ என்று உங்கள் தாத்தா - பாட்டிகள் உங்களிடம் சொல்லிக் சொல்லி வளா்த்திருக்கிறார்கள்.  இதுபோன்ற நீதிநெறிகளையும் பிள்ளைகளுக்குப் பாசத்தோடும் பாலோரும் சேர்த்து ஊட்டுங்கள்.
          நீங்கள் உங்கள் இமைச்சமாதிகளை மூடிக்கொண்டு மனசாட்சியைப் புதைத்துக் கொண்டு நல்லடக்கமாகிவிட்டீா்கள்.. தயவு செய்து தேவைப்படும் நேரங்களிலாவது உங்கள் இல்லங்களிலும் தொடங்கி வையுங்கள்..
          வீட்டிற்கு சரி.. நாட்டிற்கு? அடித்தட்டு மக்களை அழுத்துகின்ற பிரச்சனைகளை நினைவில் நிறுத்தி ஓட்டு இயந்திரத்தில் அழுத்துங்கள்  கொடுங்கோலரின் நெஞ்சழுத்தத்திற்கு உங்கள் உரலழுத்தத்தில் பதிலடி கொடுங்கள்.  இதுதான் விடுதலை.  இதுவே விடுதலை இப்படிக்கு, உங்கள் கண்கள்.
-முனைவா்.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


தமிழாயிரம்

தமிழாயிரம்
20. ஆள்வோர் துணையால் அழிப்பு
1.       ஒத்த பிறப்பை ஒழித்தார்; ஒரு நாளும்
          ஒத்துவராச் சாதியைத் தந்து.

2.       தந்திரமாய்த் தெய்வத் பிறப்பென்று தாமாகி
          மந்திரியும் ஆனார் மதத்து.

3.       மதத்தால் கொழுக்க மறைவேள்ளி செய்யும்
          விதத்தால் விழுங்கினார் வீறு.

4.       வீறுற்ற வேந்தா்கள் வீழ்ந்தார்கள்; வேள்விக்குள்
          பேறுற்றார், எல்லாமும் பெற்று.

5.       பெற்றபின் கோயில் வழிபாட்டைக் கைக்கொண்டார்
          பெற்றார் அருச்சகப் பேறு.

6.       அருச்சகப் பேற்றினால் ஆலயத்தை முற்றாய்ச்
          சுருட்டினார் இன்று வரை.

7.       வரைதந்த வண்டமிழ் வாசகம் வாரம்
          திரைதந்து மூடினார் தீா்த்து.

8.       தீா்த்தார் குடும்பத்துச் செய்யும் சடங்குகளைப்
          போர்த்தார் வடமொழிக்குப் பெய்து.

9.       பெய்யும் மழையைப் பெறுவிக்கும் வேள்வியும்
          செய்தார் பெருகப் பறித்து. 

10.     பறித்தாலும் பாராள்வோர் பக்க இருப்பால்
          வெறித்தார் தம்வேந்தா்க்கு மேல்.

விடுத