வியாழன், 16 பிப்ரவரி, 2017

துளிப்பா

துளிப்பா
சுனாமி
எத்தனைமுறை
என் காலடியை
தொட்டுச் சென்றாலும்
மன்னிக்கவேமாட்டேன்
இப்படிக்கு,
                        கடற்கரை!
  

எது அழகு?
வண்ணமும் வளைதலும்
இல்லாமல்
வானவில் அழகில்லை!
தென்றலும் புயலும்
இல்லாமல்
காற்று அழகில்லை!
இன்பமும் துன்பமும்
இல்லாமல்
வாழ்வு அழகில்லை!
மனத்தால் இன்புறும்
வாழ்வியலே                                                                           

அழகுக்கு அழகு!                                                                                                                                                                                                                                                         - இரா.கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக