செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கண்ணுக்குக் கண்ணாய்

கண்ணுக்குக் கண்ணாய்
”அடியே சிவகாமி,  சிவகாமி என்னடி பன்னிட்டிருக்க வீட்டுக்குள்ள,  வாடி வெளியே, இன்னைக்கு வேலைக்கு போய்ட்டு காசு வாங்கிட்டு வரசொன்னேன்ல வாங்கிட்டு வந்தியாடி என தள்ளாடியபடி வைரவன் கேட்டான்.
            சிவகாமி, ”ஆமாயா நானே ஸ்கூலுக்கு போன பிள்ளைகளை இன்னும் காணும்னு தேடிட்டு இருக்கேன்,  எப்பப்பாத்தாலும் வந்து காசு குடு, காசு குடுனு கொஞ்சங் கூட குடும்பம்னு அக்கறையே இல்லையா உனக்கு” சிவகாமிஈ ”ராஜா, ராமு வந்திட்டீங்களாடா, ஏன்டா இவ்வள நேரம் ஆகியும் காணும்மேனு பயந்துடேன்டா, எங்கடா போனீங்க ரெண்டுபேரும்?”  ராமு, பரிட்சை வருதுளமா அதான் ஸ்கூலயே உக்காந்து படுச்சுட்டு வாரோம்” என்றான்.
            ராஜா, ”அம்மா பரிச்சைக்கு பணம் கட்டனும்மா, எல்லாரும் கட்டிட்டாகங்க நாங்கதாமா இன்னும் கட்டல, பணம் கட்டுனாதான் பரிட்சை எழுத விடுவாங்கமா” என்றான்.
            சிவகாமி, அடுப்பங்கரைக்குச் சென்று தான் வேலை செய்த கூலி காசு, சேமித்து வைத்ததில் 500 ரூபாய் எடுத்து வந்து கொடுத்தாள்.
            வைரவன் வெடுக்கென்று அதை பறித்துக்கொண்டு ”நான் காசு கேட்டா இந்த பையளுக்கு கொடுக்குற இவங்க  ஸ்கூலுக்கு போய் படுச்சு என்ன பெரிய கலைக்கிட்டரா ஆக போறாங்க பேசாம் போய் ஒங்க அம்மாவுடன் சோ்ந்து நீங்களும் வேலைக்குப்போய் நாலு காசு சம்பாருச்சு என்கையில குடுக்கனும் போங்கடா வேலைக்கு, என்றான்.
            ராஜாவும், ராமுவும் சிவகாமியை கட்டிப்பிடித்து அழுகின்றனா்.
            சிவகாமி வேலை பார்க்கும் இடத்தில் கொஞ்சம் முன் பனமாக வாங்கி வைரவனுக்குத் தெரியாமல் இருவரையும் பள்ளிக்கு அனுப்பினாள்.
            சிவகாமி, ”டே ராமு என்னடா ஸ்கூலுக்கு போய்ட்டு நீ மட்டும் வார ராஜா எங்காடா?”
            ராமு, ”அண்ணே படிச்சுட்டு வாரேன் நீ போடா வீட்டுக்குன சொன்னான்மா” என்றான்.
இரவு 9 மணி ஆகியும் ராஜா வீடு திரும்பவில்லை சிவகாமி எவ்வளவு சொல்லியும் காது கொடுத்து கேளாமல் வைரவன் நன்றாக குடித்து வந்து ஆன்ந்தமாய் படுத்துவிட்டான்.
            இராஜா, ராஜானு இரவெல்லாம் தெரு தெருவாய் தேடித்திரிந்தாள் விடிந்தும் வரவில்லை, பத்து நாளாகியும் ராஜா வீடு திரும்பவில்லை
            ”அம்மா கண்ணு தெரியாத அனாதமா, அம்மா சாப்ட்டு மூனு நாளாச்சுமா,  எதாவது உதவிபண்ணுங்க தாயே” என ஒரு சிறுவன் ரோட்டில் திரிந்தாள் விடிந்தும் வரவில்லை, பத்து நாளாகியும் ராஜா வீடு திரும்பவில்லை.
            ராமு, ”டே ராஜா என்னடா ஆச்சு ஒனக்கு ஏன்டா இப்டி அழுக்கா இருக்க,” என்றான்.
            ராஜா, ”யாரு, யாரு நீங்க?  என்னைய தெரியுமா உங்களுக்கு,” என்றான்
            ராமு, ” என்னடா என்னை தெரியுதா கேட்குற  ஒன்  கண்ணும் ஒரு மாதிரி இருக்க என்னடா ஆச்சு  சொல்லுடா, ஒன்னை காணும்னு அம்மா ரெம்ப அழுது கிட்டு இருக்குடா            வாடா வீட்டுக்கு போவோம்  அம்மா ஒன்னை பார்த்தா ரெம்ப சந்தோசப்படும், வாடா,” என்று அழைத்துச்  சென்றான்.
            ராமு, ” அம்மா அம்மா ராஜா வந்துட்டான் பாருமா வாமா, என்றான்.
            சிவகாமி, ”ராஜா எங்கடா போன என்னையும் விட்டுட்டு நான்தான் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட பணம் குடுத்துடேன்லடா என்ன அப்பறம் என்னடா ஏன்டா ஒரு மாறி இருக்க என்னடா ஆச்சு சொல்லுடா,” என்று அழுதுக்கொண்டே கேட்டாள்
            ராமு, ”அம்மா அவனுக்கு கண்ணு தெரியலமா என்ன ஆச்சுனுகேட்டா சொல்ல மாட்டுங்கிறான் என்றான்.
            சிவகாமி, ” என்னடா ஆச்சு ராஜா சொல்லுடா என கதறுகிறாள்.
            ராஜா, ”அப்பாவுக்கு ரொம்ப முடியலனு என்ன யாரோ ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டு போனாங்க அங்க ஏதோ எனக்குக்  குடுத்தாங்க அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே புரியலமா,” என்றான்.
            பத்துநாளாக பாட்டிலும் குடியுமாக மிக்க மகிழ்ச்சியுடன் இருந்த வைரவன் வீட்டிற்கு வந்தான்.
            வைரவன், ” ஏய் சிவகாமி அடியே என்னடி இன்னக்கி சமச்ச”, என்ற படி வீட்டிற்கு நுழைந்தான்.    சிவகாமி, பிள்ளையை பத்துநாளா காணும்னு கொஞ்சமாவது அக்கற இருக்கா நல்லா குடிக்க வேண்டியது திங்க வேண்டியது என மனசுக்குள்ளே திட்டுகிறாள்.
            வைரவன், ”நீ எப்படிடா இங்க வந்த உனக்குத்தான் கண்ணுதெரியாதுல, குருட்டுபயல வச்சு நான் தண்டச் சோறு போடமுடியுமா, உன்னைய யாருடா இங்க கூட்டிட்டு வந்தது,” என ராஜாவைப் பார்த்து ஆச்சிாியமாகவும் கோவத்துடனும் கேட்டான்.
            சிவகாமி, ”அடப்பாவி, நீயெல்லாம் மனுசனாயா? ஒன்னோடசுய நலத்திற்காக என் பிள்ளைய இப்படி பலிகாடா ஆக்கிட்டியே நீ நல்லா இருப்பியா,
            என் பிள்ளைய நல்லா படிக்க வச்சு பெரியாளாக்கனும்னு ஆசப்பட்டேன்” என புலம்பியபடி வீட்டை விட்டு வெளியேறினாள் சிவகாமி.  சில மாதங்களுக்குப் பின்
            கண்ணுக்குக் கண்ணாக வளா்த்த பிள்ளைகளுடன் பார்வையிழந்தவளாய் வந்தாள் சிவகாமி.
-சு.லாவண்யா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக