வெள்ளி, 27 ஜனவரி, 2017

புதிய சரித்திரம் படைப்போம்

புதிய பாரதம்
புதிய சரித்திரம்
படைப்போம் - இப்புதிய
புத்தாண்டில்.......

பண்பாட்டு உணா்வினை
பல்லாயிரம் போ்
பாரில் அறிந்திட
வழி செய்திடுவோம் இப்புதிய
புத்தாண்டில்....

சமூக ஒற்றுமை
சமயத்தில் நிலவி
சமதா்ம சமுதாயம்
படைத்திடுவோம் - இப்புதிய
புத்தாண்டில்....

பழையன கழிந்து
புதியன தோன்றி
புன்னகை மலா்கள்
பூத்துக் குலுங்கட்டும் - இப்புதிய
புத்தாண்டில்...

நவீனத் துறையில்
நாகரிகம் வளா்ந்து
புவிப்பரப்பில்
புதுக் கண்டுபிடிப்புகள்
புரட்சி செய்யட்டும் - இப்புதிய
புத்தாண்டில்....

அதா்மம் ஒழிந்து
தா்மம் நிலைத்தோங்கி
நல்லாட்சி செய்யும்
நல் மனிதா்கள்
தோன்றிடட்டும் - இப்புதிய
புத்தாண்டில்...

சிறைச்சாலை ஒழிந்து
அறச்சாலையாம்
கல்விச் சாலைகள்
பெருகிடட்டும் - இப்புதிய
புத்தாண்டில்...

நல் கனவுகள்
நனவாகி
இத்தேசம்
வீரநடை
போடட்டும் - இப்புதிய

புத்தாண்டில்....

.அருள்சாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக