வெள்ளி, 27 ஜனவரி, 2017

மார்கழி

பல்வேறு  மகத்துவம் நிறைந்த மாதம்  மார்கழி ஆகும்.  திருமால் கிருஷ்ணனாக அவதரித்த பொழுது மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் என்றுரைப்பது இதன் சிறப்பைப் புலப்படுத்தும் என்று வருடத்தின் மற்ற நாட்களில் ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டாலே போதும்வருடம் முழுதும் சென்ற பலன் கிட்டும்இதற்காகவே ஆண்டாளும் மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

சமயப்பொறை மாதம் மார்கழி
     உலகில் பல சமயங்கள் காணப்பட்டாலும் அவற்றின் முதல் சமயமாகிய இந்த சமயத்தில் இருபெரும் பிரிவுகள் உள்ளன. அவையே சைவம், வைணவம்  ஆகும். இவ்விரண்டு சமயங்களின் கடவுளரான சிவன், திருமால்  இருவரையும் இடைவிடாது வணங்கி வீடுபேற்றை அடைவதற்குரிய மாதம் இம்மார்கழி மாதமாகும்.                                                                   
நட்சத்திரங்கள் 27 ல் திருவாதிரை என்ற சிவனுக்குரிய நட்சத்திரமும்,    திருவோணம் என்ற பெருமாளுக்குரிய நட்சத்திரமுமே திரு என்ற   அடைமொழியுடன் காணப்படுகின்றன. மற்ற 25 நட்சத்திரங்களுக்கு இல்லாத இவ்விரண்டு நட்சத்திரங்களுக்கும் உரிய சிறப்பிலிருந்தே இவை ஒன்றிற்கொன்று இணையற்றவை, இரண்டும் வேறுபாடுகள் சிறிதுமின்றி சமமானவை  என்பதை நமக்குக் காட்டுகின்றன. கோவில்களில் ஒரே கோவிலில்  சிவனையும், விஷ்ணுவையும் வைத்து வழிபடுவது சமயப்பொறை ஆகும்.     இங்கு 12 மாதங்களில் ஒரு மாதத்தில் இருபெரும் கடவுளர்களான சிவனுக்கு ஆருத்ரா ரிசனமும், விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி என்ற பெருவிழாவும் இம்மாதத்திலேயே நடைபெறுகின்றன.

சமய வளர்ச்சியில் பெண்கள்
     சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் பெண்களால் தான்   சமய மாற்றத்தினைக் கொண்டுவர முடியும் என்று மார்கழி முழுதும் மகளீரை பாடல்கள் பாடிவழிபடச் செய்வதன் மூலம் சைவ சமயம் வளரும் என்பதைக்  கருத்தில் கொண்டே திருவெம்பாவையை மாணிக்கவாசகர் இயற்றினார்.  மார்கழி   மாத   பாவை    நோன்பு,    நோன்புகளில்   மிகச்சிறந்தது.   திருமணமாகாத  கன்னிப்பெண்கள் நல்ல கணவன்   கிடைக்க வேண்டும் எனவும், மணமான  பெண்கள் தம் இல்லறம்   எக்குறைவுமின்றி         சிறக்க வேண்டும் என்றும்  இறைவனை வேண்டி   இம்முப்பது நாளும் நம்பிக்கையுடன் விரதமிருப்பர்.  இக்காலங்களில்   பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டுத் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனைத் துதிப்பர்இம்மார்கழி மாத வழிபாடு இன்றும் பெண்களால் தான் வழிவழியாகத்    தொடர்ந்து வருகின்றது.
மார்கழி மாதமும் அறிவியலும்
     மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதான பிரம்ம முகூர்த்தத்தில் (4.30 முதல் 6.00) வளிமண்டலத்தில் தூய்மையான ஓசோன் படலம் பூமிக்கு மிகத்தாழ்வாயஇறங்கி வந்து தரையில் படிகின்றது. ஓசோன் என்பது அடர்த்தியான    ஆக்சிசஜனாகும். அவ்வோசோன் நீரிலும் கலந்திருப்பதால் அதிகாலையில்   நீராடினால் உடலுக்கும் நல்லது. அதை சுவாசித்தால் நோய் எதிர்ப்பு சக்தியும்,ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது. ஆகவே அதன்   பலனைப் பெற பெண்களைக் காலையில் கோலமிடவும், ஆண்கள் பசனைப் பாடல்களைப் பாடும் போது திறந்தவெளியில் நடமாடுதலால் காற்றில் உள்ள  ஓசோன் உடலிலும் படியும். ஆதலால் தான் இம்மாதம் முழுவதும் அதிகாலை கோலமிடுவதும் இறைவனை வணங்கச் செல்வதும் சிறப்பு வாய்ந்தது என நம்முன்னோர் அறிவியல் சார்ந்த உண்மையை இதில் புகுத்தினர்.

மார்கழி தீயமாதமல்ல
     மார்கழி மாதத்தை நாம் சூன்யமாதம், பீடை மாதம் என்றெல்லாம் தவறாகக்   கூறி வருகின்றோம். ஆனால் அதற்குப் பொருள் அதுவல்ல.

சூன்யமாதம்
     சூன்யம் என்றால் ஒன்றுமில்லாதது எனப்பொருள். நிலையற்ற இந்த வாழ்வைஅர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமானால் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஆதலால் தான் இம்மாதத்தை இறைவழிபாடுகளுக்கென்றே ஒதுக்கி வைத்தனர்.

பீடை மாதம்
     மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து விட்ணுவை வழிபட்டால்  செல்வச் செழிப்பைப் பெறுவர். அதனால் தான் இம்மாதம்பீடுடைய மாதம் என அழைக்கப்பட்டது என்றழைக்கப்பட்டது. இறைவழிபாட்டால் பெருமை நிறைந்த மாதம் என்பதே இதன்பொருள். பீடுடைய மாதமே பின்னாளில் மருவி பீடை மாதம் என்றானது.

தனுர் மாதம்
     மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு இராசியில் தோன்றுவதால் இதனைத் தனுர் மாதம் என்றும் அழைக்கின்றோம். தனுசு இராசிக்கு அதிபதி குருபகவான்எனினும் குருபகவான் வீட்டில் சூhpயன் மார்கழி மாதத்தில் தோன்றுவதால்  இம்மாதத்தைத் தனுர் மாதம் என்றும் அழைக்கின்றோம்.

தேவர் மாதம்

    மார்கழி மாதத்தைச் சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். 
ஏனெனில் தேவர்களுக்கு ஒருநாள் என்பது ஒரு ஆண்டாகும். அதில் ஆறு  மாதங்கள் பகல் பொழுதாகவும் ஆறு மாதங்கள் இரவுப் பொழுதாகவும்  அமைகிறது. இதில் மார்கழி மாதம் என்பது வைகறைப் பொழுதாக  அமைகின்றது. இம்மாதத்தில் தேவர்கள் வைகறைப் பொழுதில் பிரம்மமுகூர்த்தத்தில் பூமிக்கு வருவதாக மக்களிடம் காலங்காலமாக நம்பிக்கை காணப்பட்டு வருகின்றது. பூமிக்கு வரும் இத்தேவர்களையும், மகாலெட்சுமியையும்  வரவேற்கவே பெண்கள் அதிகாலையில் கோலமிடுதலும்,பக்திப் பாடல்களைப் பாடுவதும் ஆகும் என   சைவ சமயவாதிகள் தெரிவிக்கின்றனர்.

சுபநிகழ்வுகளும் மார்கழியும்
     மார்கழி மாதம் நம் உடம்பைத் திடப்படுத்திக் கொள்ளவும் ஆற்றலைப் பெருக்கிச் சேமித்துக் கொள்ளவும். உடலில் சமன்பாட்டைக் கொண்டு வரவும் சாத்தியமான காலம் ஆகும். ஏனெனில் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிலிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது. ஏனைய காலங்களில் மூலாதாரத்தை நோக்கி இருக்கும் ஈர்ப்பு சக்தி புவிஈர்ப்பு விசை காரணமாக மார்கழியில் பூமியின் வடபாதியில் இருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இந்நிலையில் விதைவிதைத்தால் அது யாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இயற்கைக்கே இந்நிலை என்றால் மனிதனின் நிலை என்னவாகும். ஆதலால் தான் இம்மாதத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை நம் முன்னோர் மேற்கொள்ளாமல் இம்மாதத்தை வழிபாட்டிற்கென்றே ஒதுக்கி வைத்தனர். கருவுறுவதற்கு ஏற்ற சமயமும் இதுவல்ல. எனவேதான் இல்லறத்தில் இருப்போர் புலனடக்கத்தை மேற்கொண்டு வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டனர். ஆதலால் தான் பன்னிரெண்டு மாதங்களில் வழிபாடுகளுக்கென்றே தனியாக ஒதுக்கப்பட்ட இம்மார்கழி மாதத்தில் நம் முன்னோர் சுபநிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில்லை. எனினும் அதற்கான முன்னேற்பாடுகளான பெண்பார்த்தல் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என சோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்கழி நிகழ்வுகள்

v  மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் வருவது மட்டுமே பெரும்பான்மையாக நமக்குத் தெரியும். ஆனால் இம்மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
v  பாற்கடலில் அமுதம் கடையப்பட்ட போது முதலில் தோன்றிய விசயத்தை சிவன் உண்டு மக்களைக் காத்தது.
v  மகாபாரதப் போர் நடைபெற்றது.
v  இந்திரனால் கல்மாரி மழை பொழிந்து மக்கள் துன்பப்பட்ட போது கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் குடையாகப் பிடித்து மக்களைக் காத்தது.
v  இம்மாதம் முழுதும் பாவை நோன்பிருந்த ஆண்டாள் அரங்கனை அடைந்தது.
v  சிவன் சிதம்பரத்தில் நந்தனாரை ஆட்கொண்டது.
v  சிறுவனான மார்க்கண்டேயனின் பக்தியில் மெய்சிலிர்த்து அவனைக் கொண்டுசெல்ல வந்த எமதர்மனைத் திருமால் எட்டி உதைத்து அவனைக் காத்தது.
v  இராம நாமத்தையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு அனுதினமும் உச்சரித்து வந்த அனுமானாகிய ஆஞ்சநேயர் பிறந்தது.

கோலத்தில் பூ வைப்பது
     திருமணத்தரகர்களோ, மணமகன் தேவை, மணமகள் தேவை என விளம்பரப்படுத்த ஊடகங்களோ இல்லாத அக்காலத்தில் தம் வீட்டில் திருமண வயதில் ஆண், பெண் பிள்ளைகள் இருப்பதை ஊராருக்கு உணர்த்த கோலத்தில் பூசணிப்பூ வைப்பர். அவ்வதிகாலை வேலையில் வீதியில் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு வரும் ஊர் மக்களின் கண்களில் இப்பூப்பட திருமண வயதுப் பிள்ளைகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு தைபிறந்ததும் திருமணத்தைப் பேசி முடித்துவிடுவார்கள். திருமண வயதில்லாத மற்றவர்கள் வீட்டின் கோலத்தில் பூ வைப்பதில்லை.

கண்ணனும், கண்ணதாசனும்

தன்னை உணர்ந்த
கண்ணன் கூறினான்
மாதங்களில் நான்
மார்கழி என்று

பெண்ணை உணர்ந்த
கண்ணதாசனும் கூறினான்
மாதங்களில் அவள்
மார்கழி என்று.

                                -மு.செண்பகவள்ளி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக