வெள்ளி, 27 ஜனவரி, 2017

இளைஞா்களின் அறப்போராட்டத்தால் மீண்ட பண்பாடு

 நமது நாட்டு இன மாடுகளின் அழிவு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அதற்கு 300 வருட சாரித்திரம் இருக்கிறதுஆங்கிலேயா் ஆட்சியின் போது இந்தியாவுக்கு வந்த இராபா்ட் கிளைவ் தான் தமது நாட்டு மாடுகளின் அழிவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்கி.பி. 1755-ல் இந்தியாவுக்கு வந்த கிளைவ் தமிழா்களின் விவசாயத்தையும் பல்வேறு வளம் நிறைந்த இந்தியாவையும் பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளையும் கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தார்இம்மாடுகளை வைத்து எந்த செலவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தமிழனின் பாரம்பாரிய பண்பாட்டு விவசாய முறை அவரை உறுத்தியது அடிமை நாட்டில் வாழும் தமிழன் எப்படி அனைத்து தேவைகளையும் அவனே பூா்த்தி செய்து கொள்வது என்ற சிந்தனை இராபா்ட் கிளைவைத் தூங்க விடாமல் செய்து கொள்வது என்ற சிந்தனை இராபா்ட் கிளைவைத் தூங்க விடாமல் செய்தது.
     அடிமை மக்கள் தன் நாட்டைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று நினைத்த இராபா்ட் கிளைவ்  விவசாயத்தின் முதுகெலும்பாகவும் விவசாயத்திற்கு உறுதுணையாகவும் இருந்த நாட்டு மாடுகளை அழிக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பசுவதைக் கூடத்தை அமைத்து கி.பி.1760-ல் ஒரு இயக்கம் தொடங்கினார்அதன் மூலம் ஒரு நாளைக்கு 30,000 மாடுகளை  கொன்று குவித்தார்
     ஆனால் அதே வேளையில் நமது நாட்டுக் காளைகளின் வித்துக்களை எடுத்து அவா்கள் நாட்டில் காளைகளை உருவாக்கினார்அந்த மாட்டுச் சாணத்தையும் அதன் சிறுநீரகத்தையும் தம் நாட்டில் வயலுக்கு உரமாகப் பயன்படுத்தினார் இதன் மூலம் பல்வேறு மருத்துவ குணமிக்க பலன்களைக் கண்டறிந்தார்.
     1907-ஆம் ஆண்டு மாடுவதைச் சட்டத்தால் ஒரு நாளைக்கு லட்சம் மாடுகளை கொன்று குவித்தார் இந்த விதத்தில் மாடுகள் அழிக்கப்பட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகள் மாடுகள் இருக்கும் என்பது தொரியவில்லை நமது பாரம் பரியத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் நிலையில் தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.
     மாடுகளின் மீட்புக்கான இப்போராட்டத்தில் நம் இளைஞா்கள் வெற்றிபெற்றுள்ளனா்  மக்கள் மத்தியில் விழிப்புணா்வு தோன்றியதோடு அறப்போராட்டம் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.



-.கலைச்செல்வி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக