வியாழன், 15 ஜூன், 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
7. அழிசெயல்
1. அதைஅறிவான் நாடறிவான் நாட்டதன் எல்லை
   யதைஅறிவான் காப்பான் அவன்.

2. அவனிழந்த எல்லை அதனால் நாம்இந்நாள்
   எவா்காப்பும் காவா இயல்.

3. இயலும் இசையும் இசைக்கூத்தும் எல்லாம்
    அயலாய் அழிகின்றான் பார்.

4. பாரெல்லாம் சென்றான்; பரவையெலாம் நாவாயால்
    சீராண்டான்; சீரழிவான் இன்று.

5. இறைவன் நாடோடி; எல்லாம் இழந்தானாய்ச்
   சென்றவனை ஏற்பார் எவா்?

6. எவா்நாடும் வாணிகத்தால் ஏற்ற பரதா்
   பெயா்தானும் பெற்றதா போ்?

7.போ்தானும் துச்சந்தன் பெற்ற மகன்பேராம்
   யார்தாம் அறிந்தெதிர்த்தார் தாம்.

8. தாமறிய ஈழத் தமிழா்கள் பூண்டோடு
    தாமழியச் செய்தனா் ஏன்?

9. ஏனழித்தார் என்றால் தமிழா் தலைதூக்கல்
    ஆனதனைக் கண்டறிந்து தான்

10. தானாடா விட்டாலும் தன்தசை ஆடுமெனல்
      ஏனறிந்தும் ஒன்றார் இவண்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக