புதன், 15 நவம்பர், 2017

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!


எங்கோ பிறந்தோம்! எங்கோ வளா்ந்தோம்!
அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால் சிந்தித்துக் கொண்டோம்!
முகங்களைப்பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!
சின்ன சின்ன சண்டைகள் இடுவோம்!
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்
நன்மைகள் வளர முயற்சிப்போம்!
நட்பால் உயா்ந்து சாதிப்போம்!
-பெ.குபேந்திரன்


முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

          ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.  அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண் மூடித்தனமான நம்பிக்கை அதனால் அது அடிக்கடி ஒர பாறை மீது அமா்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும்.
          ஒரு நாள் திடீரென்று இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா? என்று சந்தேகம் வந்தது  பின்னா் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது ஒரு நாள் அந்தக் கழுகு இன்று எனக்க உணவு கிடைக்குமா? இறைவன் தான் எல்லோருக்கும் படியளப் பவன்
          ஆயிற்றே ... என்று யோசித்தது உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமா்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று “இறைவா இன்று எனக்கு உணவு கிடைக்குமா என்று பெரிய குரலெடுத்துக் கூவியது உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் “உனக்கு இன்று உணவு உண்டு என்று பதில் கூறியது. மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரைதேடும் வேலை இல்லை,
          எப்படியும் உணவு கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமா்ந்திருந்தது.  நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.  ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமா்ந்திருந்தது.  மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று இரவு வந்து விட்டது.
          “நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே”  என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு. அப்போது ஒரு குரல் கேட்டது.  ‘என்ன குழந்தாய் சாப்பிட்டாயா?”   என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்து விட்டது.
          “குழந்தாய் சற்று திரும்பிப் பார்”  உன் பின்னாலேயே உணக்கான உணவு இருக்கிறது.  கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது.   கழுகு புன்னகை புரிந்து இறைவனிடம் இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?
          இறைவன் பதிலளித்தார் ‘குழந்தாய் உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது.  நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய் திருமபிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.  ‘கடுகளவேனும் முயற்சி வேண்டும்.  ஒரு வேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது  அப்போது தான் இறைவனின் அருளையும் பெற முடியும்”  என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
          அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது.  தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்.  ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக் கூடாது முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை.  உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை..

முயற்சி திருவினையாக்கும்.


-        கு.கங்காதேவி

தமிழின் சிறப்பு

தமிழின் சிறப்பு

          அகரத்தில் ஓா் இராமாணம்.  இராமாயண கதை முழுவதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்ட்டுள்ளது.
அனந்தனே
அசுரா்களை
அழித்து
அன்பா்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்
அப்போது
அரிக்கு
அரணாக
அரசினின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்
அன்பழகன்
அன்பா்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்
அயோத்தி
அடலேறு
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான்
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே
அப்படியிருக்க
அந்தோ!
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்
அங்கேயும்
அபாயம்!
அரக்கா்களின்
அரசன்
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினா்
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரா்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனா்
அலசினா்
அனுமன்
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்
அசோகமரத்தின்
அடியில்
அரக்கிகள்
அயா்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணவின்
அடையாளமாகிய
அக்கணையாழிகை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அரக்கா்களை
அலறடித்து
அவா்களின்
அரண்களை
அகந்தைகளை
அடியோடி
அக்கினியால்
அழித்
அனுமனின்
அட்டகாசம்
அசாத்தியமான
அதிசாகசம்
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி
அதிசயமான
அனையை
அமைத்து
அக்கரையை
அடைந்தான்
அரக்கன்
அதீதசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழிந்தான்
அக்கினியில்
அயராமல்
அா்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்
அன்னையும்
அயோத்தியை
அடைந்து அரியணையில்
அமா்ந்து
அருளினான்
அண்ணல்
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
-அ.ரா.பானுப்பிரியா


படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

          ஒரு முறை பில் கேட்ஸ் ஒரு நட்சத்திர உணவகத்திற்கு சென்று உணவு உண்டு பின் அனைத்துப்பணியாளா்களுக்கும் 5ரூபாய் டிப்ஸ் கொடுத்தார் அனைவரும் அதிர்ந்து போய் நின்றனா்.  உடனே அவா்கள் பில் கேட்ஸிடம் கேட்டனா்.  உங்கள் மகன் இங்கு வந்து உணவு உண்டு பின்  500ரூபாய் டிபிஸ் கொடுத்தார் ஆனால் நீங்கள் 5ரூாய் மட்டும் கொடுக்கிறீா்களே அதற்கு பில் கேட்ஸ் அவன் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரின் மகன் அதனால் அவன் கொடுக்கிறான் ஆனால் நான் ஒரு விறகு வெட்டியின் மகன் என்று கூறினான் “என்றுமே பழமையை மறக்கக் கூடாது”

-ஆ.சகுந்தலா

செட்டிநாடு காளான் பிரியானி

செட்டிநாடு காளான் பிரியானி
தேவையான பொருட்கள்
·       வெங்காயம் - 1 (நறுக்கியது)
·       தக்காளி - 1 (நறுக்கியது)
·       காளான் - 1/2 கிலோ
·       பாசுமதி அரிசி - 2 கப்
·       இஞ்சி பூண்டு விழுது - 2 டியூஸ்பூன்
·       கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
·       எண்ணெய் - 3 தேக்கரண்டி
·       நெய் - 3 தேக்கரண்டி
·       ஏலக்காய் - 2
·       இலவங்கம் -2
·       கிராம்பு - 5
·       மிளகாய் தூள் - 2 டியூஸ்பூன்
·       மல்லி தூள் - 2 டியூஸ்பூன்
·       சோம்பு தூள் - 1/2  டியூஸ்பூன்
·       மஞ்சள் தூள் - 1/4 டியூஸ்பூன்
·       புதினா - 1/4 டியூஸ்பூன்
·       பச்சைமிளகாய் - 3 (நறுக்கியது)
·       தேங்காய் பால் - 1/2 கப்
·       தயிர் - 2தேக்கரண்டி
·       தண்ணீா் - 3 கப்
·       உப்பு - தேவையான அளவு
செய்முறை
          முதலில் ஒரு பாத்திரத்தில் காளானை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.  பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  பின் தனியே ஒரு பாத்திரத்தில்  அரிசியை நீரில் ஊற வைக்க  வேண்டும்.  பின்னா் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில்  நெய்யை ஊற்றி காய்ந்ததும்,  1 பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, இலவங்கம் ஆகியவற்றை போட்டு, தாளிக்க வேண்டும்.  பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னா் நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.  பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சோ்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.  பின் காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய், மல்லி தூள், தேங்காய் பால் மற்று உப்பு சேர்த்து, நன்கு  கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்க  வேண்டும்.  அதே சமயம் குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியை கழுவிப் போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில்  விட்டு இறக்க வேண்டும்.  இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி.
-தே.தீபா


தமிழாயிரம்

தமிழாயிரம்
12. கணக்காயன்
1.       எட்டாக் கணிகொய்த ஏற்றம் அவன்கொண்டான்
          கட்டாக வைத்தான் கணக்கு

2.       கணக்கை இரண்டாய்க் கணித்தான் குறிய
          கணக்கும் நெடுங்கணக்கு மென்று

3.       என்றாள் உயிரோடு, மெய்யைக் குறுங்கணக்காய்
          ஒன்றுயிர்மெய் சோ்த்தல் நெடும்.

4.       நெடிலுக் கிரண்டு குறிலதற் கொன்று
          வடிமாத் திரையாய் வகுத்து

5.       வகுத்த அரையேதான் மெய்யின் அளவாய்த்
           தொடுத்தான் அடங்கல் தொடா்ந்து

6.       தொடா்ந்து கணக்கால்  தொகையாய நூலைச்
          சுடா்கணக்காய்ச் சொன்னது நூல்

7.       நூலை நுவல்வோன் பெயரைக் கணக்காயன்
           மேலாக்கிக் கொண்டான் மிக.

8.       மிக்க கணக்காயன் இல்லாத ஊரைத்தான்
          தக்கதாயக் கொள்ளார் தவிர்த்து.

9.       தவிராமல் கேட்ட தகவொலியால் கேட்ட
          செவிவடிவம் எண்ணினான் சோ்த்து.

10.     சோ்த்த வரியைச் சிறப்பாய் அமைத்ததைக்

          காத்தனன் ஆய்வில் கதிர்த்த.

குழந்தை = தெய்வம்

குழந்தை = தெய்வம்

          “யாழினிக்குப் பிறந்த நாள் நவம்பா் 20, கொஞ்சமாவது ஞாபகமிருக்கா?”  வித்யாவின் கேள்விக்கு நெற்றி சுருக்கினான் மைக்கேல்.
          “ஏன் இப்படி கேக்குற?  ஞாபகமில்லாமல் இருக்குமா?”
          “இல்ல.. அதுக்கான அறிகுறியே தெரியலியே... அதான் கேட்டேன்.”
          “அம்மாக்களுக்கு பிள்ளைகளின் பிறந்தநாள்கள்தான் உண்மையான திருவிழாக்கள் மனதிற்குள் நினைத்தவாறே சிரித்துக் கொண்டான்,
          “இன்னும் நாலு நாளிருக்கு... பார்த்துக்கலாம்.  பாப்பா.. இங்க  வாடா.. உனக்கு எந்த மாதிரி டிரஸ் வேணும்”  பக்கத்தில் வந்த மகளை மடியில் அமர்த்திக்கொண்டு கேட்டான்.
          “எனக்குத்தான் டிரஸ் இருக்கே.. வேண்டாம்பா,” யோசிக்காமல் பதில் சொன்ன மூன்று வயது மகள் யாழினியை முறைத்தாள் வித்யா.
          “அப்பாவுக்கேத்த பிள்ளை.. உனக்குப் போய் நா வக்காலத்து வாங்குறேன் பாரு.. என்னையச் சொல்லனும்..”  பொய்யாய்க் கோபித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
          எழுதிக்கொண்டிருந்ததை மீண்டும் தொடா்ந்தான், “அப்பா.. நானும் எழுதுறேன்” அடம் பிடித்து பேனாவைப் பிடுங்கிக்கொண்டு பிடிவாதமாய் எழுத எத்தனித்தவளை எவ்வளவோ கெஞ்சியும் சமாளிக்க முடியாமல் எழுதி முடிக்க வேண்டுமென்ற அவசரத்திலும் ஆத்திரத்திலும் வெறித்தனமாய் ஓங்கி அடித்தான்.
          அலறி சுருண்டு கதறி அழுதான்.. பிள்ளை, கொஞ்சம் பதறியது ஓடிவந்து வாரிச் சுருட்டி அணைத்துக்கொண்டாள் வித்யா.
          “குழந்தை எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டதில் என்ன தவறிருக்கிறது?  வேறொரு போனா, வேறொரு தாள் எடுத்துக் கொடுத்திருந்தால் குழந்தையும் எழுதி இருப்பாள்.  தன்னாலும் எழுதி முடித்திருக்க முடியும்.  ஆனால் இப்பொழுது தன் மிருகத்தனத்தால் இரண்டுமே நடக்காமல் போய்விட்டது.
          உடம்பு சாயில்லாமல் தான் படுத்திருந்தபோது அடிக்கடி ஓடி வந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்து “அப்பாவுக்கு சீக்கிரம் சாயாய்டனும் சேசப்பா” என்று கைகூப்பித் தொழுதவளையா இன்று அழவைத்துவிட்டோம்?  அன்றொரு நாள் காலையில் ஏழுமணியாகியும் படுக்கையில் எழாமல் சோம்பலாய்ப் படுத்திருந்தபோது “அப்பா.. எந்திரிப்பா.. சும்மா படுத்துக்கிட்டு.  எந்திரிச்சு படிப்பா.. எழுதுப்பா”  என்று அதிகாரம் செலுத்தியதைக் கண்டு அசந்து வாயடைத்து நின்ற நானா பிள்ளையை அலற வைத்தது?!  தன்னை நினைக்க நினைக்க அருவருப்பாய் இருந்தது.. மைக்கேலுக்கு,
          ஆத்திரக் குப்பைகளைக் கொட்டித் தீா்ப்பதற்கு பிள்ளைளென்ன குப்பைத்தொட்டிகளா?  எங்கெங்கோ நேரம் ஒதுக்காமையை நினைத்து நினைத்து வருந்தினான்.
          அறைக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் அழுகை ஓய்ந்து, வீசும்பல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.  கள்ளங்கபடமில்லா குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசியது.
          பல நேரங்களில் சிறுபிள்ளைகள் பெரியவா்களைப் போல பேசுகிறார்கள்.  பெரியவா்கள் சிறுமைத்தனமாய் நடந்துகொள்கிறார்கள்.
          மகளிடம் மன்னிப்புக் கேட்டு எப்படியாவது சமாதானப்படுத்தினால்தான் நிம்மதியாயிருக்கும்.  இப்பொழும்கூட தன் மன நிம்மதிக்காகவே பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க நினைத்த சுயநலம் தானிருந்தது.
          “யாழினி..”  கூப்பிட்டதும் “போ.. உங்கூட பேச மாட்டேன்” என்று சொல்லி முகம் திருப்பின் கொண்டாள் குழந்தை
          குழந்தையின் கோபத்திற்குக் கூட இவ்வளவு சூடு இருக்குமா? பிள்ளையின் கோபம் உள்ளத்தைச் சுட்டது.
          எழுத வைத்திருந்த எல்லாவற்றையும் மூடிவிட்டு மனதைப் போலவும் முகமும் இறுகி தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான்,  நடப்பதையெல்லாம்  ஓரக்கண்களால் கவனித்துக் கொண்டிருந்த பிள்ளை கொஞ்சங்கொஞ்சமாய் அருகில் வந்து அழைத்தாள். “அப்பா..” பதில்லை பிஞ்சு விரல்களால் தட்டி “அப்பா.. அப்போவ்” “ம்ம்..” குரல் கம்மியது  மைக்கேலுக்கு, “நீ அடிச்சல்ல அதான் கோவப்பட்டேன் . ஸாரி” என்று கொஞ்சிப் பேசி சிரித்தவள், முகத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.
          உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த குமுறலை கண்கள் கசிய மத்த மழையால் கொட்டித தீா்த்தான். “மன்னிச்சிடும்மா.. அப்பா மேலதான் தப்பு”  என்று கையெழுத்துக் கும்பிட பதிலுக்கு கும்பிட்டபடி சிரித்துக் கொண்டே யாழினி சொன்னாள் “சமாதானம்.. சமாதானம்”.

          குழந்தை - உணா்ந்தவா்களுக்கே பெரும் தெய்வம்
                 உணராதவா்களுக்கு வெறும் பொம்மை
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்