புதன், 20 பிப்ரவரி, 2019

நகரத்தாரின் கோயில்பணி


                  நகரத்தாரின் கோயில்பணி

                கோயில் உள்ள ஊரில் தான் குடியிருக்க வேண்டும் என்பது பெரியோh; வகுத்த மரபு. ஆனால் குடியிருக்கும் ஊரிலெல்லாம் கோயில் கட்டுவது நகரத்தார் இயல்பு. நகரத்தார் புதிதாகக் குடியேறும் ஊரிலெல்லாம் கோயில் கட்டுவது நகரத்தார் இயல்பு. நகரத்தார் புதிதாகக் குடியேறும் ஊரிலெல்லாம் முதன் முதலில் கோயில் கட்டும் திருப்பணியிலேயே ஈடுபட்டுள்ளார்கள்.
                கி.பி. 1501 ஆம் ஆண்டில் கல்வாச நாட்டில் இளையாத்தன் குடியான் குலசேகரபுரத்திலிருந்து இரணிA+ருக்கு வந்த நகரத்தார்கள். ஓர் அம்மன் கோயிலை அமைத்து வழிபடுவதற்காக இரணிa+ர் மக்களால் கோயில் கட்டுவதற்கான இடம் சுதந்திரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
                நகரத்தார் வாழும் 78 ஊர்களிலும் நகரச் சிவன் கோயிலைக் கட்டியுள்ளனர். அக்கோயில்கள் தொடர்ந்து செயல்பட அறக் கட்டளைகளையும் திருக்குளம் பசுமடம் நந்தவனம் தண்ணீர் பந்தல் தென்னந்தோப்பு நன்செய் புன்செய் நிலங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
                கோயில்களுக்கு அறப்பணி செய்வதற்காகவே நகரத்தார்கள் தங்கள் தொழிலில் இறைவன் பெயரிலும் பங்கு வைத்து அதில் வரும் இலாபத்தைக் கோயில் பணிகளுக்குக்கே செலவிடுகின்றனர். இது தவிர கோயில் பணிகளுக்கே செலவிடுகின்றனர். இது தவிர கோயில் என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பணம் கொடுத்து வருகின்றனர். கும்பாபிடேகம் முதலிய பெரும் பொருட்செலவு வரும்பொழுதுஆஸ்தி வரிஎன்ற பெயரில் தங்கள் சொத்திற்கு ஏற்ற வகையில் (1000 ரூபாய்க்கு 50 பைசா என்ற முறையில்) பெரும் நிதி உதவியினைச் செய்கின்றார்கள்.
                நகரத்தார்கள் தங்களுக்குள் ஒன்பது பிரிவினராக ஒன்பது கோத்திரங்களைக் கொண்டு வாழ்கிறார்கள். அந்த ஒன்பது கோத்திரங்களையும் ஒன்பது கோயிலின் அடிப்படையிலே அமைத்துக் கொள்கின்றனர்.
                இளையாத்தன்குடி> மாத்தூர்> வியரவன்பட்டி> நேமம்> இலுப்பைக்குடி> சூரைக்குடி> வேலங்குடி> பிள்ளையார்பட்டி> இரணிa+u; என்னும் ஒன்பது கோயிலின் அடிப்படையிலேயே திருமணம் முதலியவற்iw மேற்கொள்கின்றனர். இந்த ஒன்பது கோயில்களுக்கும் நகரத்தார்கள் அதிக அளவு பொருள் செலவு செய்துள்ளனர்.
                நகரக் கோயில்களுக்கும் தங்கள் சொந்த ஊயீல் உள்ள கோயில்களுக்கும் உதவியது தவிர தங்களது u;களுக்குப் பக்கத்தில் உள்ள பிற h;களில் உள்ள கோயில் திருப்பணிக்காகவும் 123 தேவாரத் தலங்களிலும் 6 பிரபந்த தலங்களிலும் 33 பிற தலங்களிலும் கோயில் திருப்பணிக்காக இவாu;கள் இவu;கள் பலத் தொண்டுகளைச் செய்துள்ளனu;;.
                இவர்கள் நம் நாடு தவிர இலங்கை> பர்மா> மலேசியா> சிங்கப்g+u; வியட்நாம்> தாய்லாந்து> இந்தோனேசியா> மொhPசியசு நாடுகளிலும் கோயில் திருப்பணிக்காக அதிகமாகச் செலவிட்டு வருகின்றனர். எனினும் நன்கொடையாகக் கொடுத்த பணத்தைக் கூறி விளம்பரமோ தற்பெருமையோ தேடிக் கொள்ள விரும்பாதவu;s;.

                                                                                                                                                                                                                . முத்துமணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக