புதன், 20 பிப்ரவரி, 2019

வாய்விட்டு சிரித்தால்..


                வாய்விட்டு சிரித்தால்..

                சிரிப்பானது மூன்று மாத குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றது. சிரிப்பு என்பது இதழ்களால் மறைக்கப்பட்ட சொர்க்கம். சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீh;கள். இதுவே சிரிப்பின் தத்துவமாகும்.
                சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கவும்.
                கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். மகிழ்ச்சியான அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச் சுற்றி எதிர்மறையான எண்ணங்களை பரப்பும்.
                ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்க என்று பொருள். அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவு கோலமாகவும் சிரிப்பு உள்ளது.
                சிரிப்பு என்பது மனம் சம்பந்தப்பட்டதாகும். மனம் என்பது ஒரு நன்றியுள்ள சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான முதலாளி என்றும் சொல்வார்கள்.
                எனவே சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நன்கு தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டு விடுவார்கள். சிரிப்பு என்பது சிநேகத்துடன் முதல் தூதுவாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும் இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது.
                புன்னகையும்இ சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமானவர்களை கவர்கின்றன. நமது வாழ்நாளை நீடிக்கின்றது.
ஆம் நண்பார்களே .......
                எனவே சுயமாக சிரிக்க முடியாவிட்டால் மருந்தாக நினைத்து சிரியுங்கள். அது உங்கள் உடலுக்கும் நல்லது.

                                                                                                           . ரெஜினா பேகம்

2 கருத்துகள்: