திங்கள், 19 பிப்ரவரி, 2018

பழமொழி உண்மைப்பொருள்

பழமொழி உண்மைப்பொருள்

          “காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைத்தல் நன்று” என்ற பழமொழி ‘கற்று எழுதுவதைவிடப் பேரிகை கொட்டிப் பிழைத்துவிடலாம்’ என்று தவறாகப் பொருள் உரைக்கப்பெறுகிறது.  அதனுட் பொதிந்து கிடக்கும் கருத்தைப் பலா் உணரவில்லை.  வறுமையில் வாடிய புலவன் ஒருவன் உள்ளம் வெதும்பி மன்னா்களிடமும் வள்ளல்களிடமும் சென்று கவிப்பாடி பிழைப்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது எவ்வளவோ மேல் என்று வறுமைத்துயா் தாளாமல் புலம்புவதே இதன்பொருளாகும்.  எனவே இலக்கணம் கற்று பாடல் எழுதுவது கடினம் என்பது தவறான பொருளாகும்.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக