திங்கள், 19 பிப்ரவரி, 2018

படித்ததில் பகிர்ந்தது

படித்ததில் பகிர்ந்தது

          *விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது, விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி, ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்கு கிடைத்த சக்தியை கொடுத்தார்.* மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
          இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில், வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார். *"இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்குகிடைத்த புண்ணிய பலனைஉமக்கு அளிக்கிறேன்''* என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.
          "நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனும், இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்றுதானே யோசிக்கிறீர்கள்?'' என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார். எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். 
          "இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள்'' என்றார் பிரம்மா. அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். "தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும்'' என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தரவேண்டினர்.

-சு.லாவண்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக