புதன், 17 ஜனவரி, 2018

தமிழாயிரம்

மிழாயிரம்

14. மெய்யியல்

1.       தோ்ந்த உயிரியக்கம் செய்யும் உயிர்மெய்யும்
          ஓா்ந்து படைத்தான் உணா்ந்து

2.       உணா்ச்சிக் குயிரே முதலாகும் மெய்யின்
          புணா்ச்சி உயிர்மெய்யாம் என்று

3.       என்றவிலை யெ்யியலாம் என்னக் கணித்தான்பின்
          நன்றாக ஊன்றினான் நாற்று

4.       நாற்றே பலநூறு நாற்றாகிப் பண்ணையாய்
          உற்றாய்ப் பரவிய தோர்ந்து

5.       ஓா்ந்த உலகம் உயிர்தளை என்பவை
          தோ்ந்தான் தெளிமெய் யியல்

6.       மெய்யியல் கற்பிக்க மேலாய ஓா்காலம்
          ஐயகவை என்ற அறிந்து.

7.       அறிந்தோ திளமைப் பருவத் ததனை
          அறிந்திட வைத்தான் ஒழுத்து

8.       எழுத்தில் அகரம் இயக்கும் இயவுள்
          வழுத்தாய் வகுத்தான் வகை

9.       வகையாய் எழுத்தை வகுத்த வகையே
          தொகையாய மெய்யியல் ஓா்.

10.     ஓா்ந்த அறிவியல் ஒன்ற அமைத்ததைத்
          தோ்ந்துணா்ந்தால் ஆகும் தெளிவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக