புதன், 12 ஜூலை, 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
இன அழிப்பு
1.     இவணுள்ளார், சான்றோரகள் அன்றே உரைத்தும்
        சுவராக நின்றார் தனித்து.

2.     தனித்தனிக் கட்சியுடன் தாழ்வுறுத்து சாதி
        இனிப்பானார் நில்லார் இணைந்து

3.     இணையா நிலைமை எளிதாய் அறிந்தார்
        இணைந்தே கொடுக்கிறார் இன்று.

4.     இன்றை நிலைமை இதுவென்றார் அன்றம் தாம்
        ஒன்றாக நின்றறியார் ஓர்.

5.     ஓர்ந்தால் தமிழர் தமிழராய் நின்றிருப்பார்
       நேர்ந்தார்பால் நேராமல் நின்று.

6.    நின்றழித்த ஆரியத்திற் காட்பட்ட ஆள்வோரால்
       இன்றுவரை நேர்தல்  நினை

7.    நினைத்தால் தமிழர் அழியத் தமிழர்
       எனைத்தும் கொடுத்த தறி.

8.    அறிவான் இனக்காப் பறிவான் பகையை
      அறிந்தழிப்பான் வாழ்வான் அணைந்து.

9.   அணைந்தான் அயலார் தமைப்போய் அழைத்தான்
      துணிந்தழித்தான் தன்னினம் தான்.

10.   தன்னினம் தானழிக்கத் தந்தனவே அன்னியா்
        முன்னிய ஆட்சிகள் மூன்று


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக