தேவையான பொருட்கள்:-
1. பச்சை அரிசி
- 2 ஆழாக்கு
2. புழுங்கல் அரிசி
- 2 ஆழாக்கு
3. வெந்தயம்
- 3 தேக்கரண்டி
4. உளுந்து
- 200 கிராம்
5. உப்பு
- தேவைக்கேற்ப
6. வெல்லம்
- ½ கிலோ (தேவைக்கேற்ப)
7. ஏலம், சுக்கு
- 2 (கல்) தேக்கரண்டி
8. நல்லெண்ணெய்
- தேவைக்கேற்ப
செய்முறை:-
பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 4 மணிநேரம் ஊறவைக்கவும் பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்திற்கு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள
வேண்டும். மாவைக் கரைக்க வேண்டாம் மாவு பொங்கியவுடன் வெல்லத்தைப் பாகு காய்ச்சி மாவு ஆறியவுடன் ஊற்ற வேண்டும் பிறகு ஏலம், சுக்கு பொடி செய்து மாவில் போட்டு நன்கு கலக்க வேண்டும் பிறகு குழிப்பணியாரச் சட்டியில் மிதமான சூட்டில் நல்லெண்ணெய் இட்டு மாவை ஊற்றி வெந்தவுடன் திருப்பி விட்டு எடுக்க வேண்டும் குழிப் பணியாரம் தயார்.

குறிப்பு:-
வெல்லக்கட்டியை 100மி.லி தண்ணீர் ஊற்றி பாகு முறிந்து விடாமல் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
-ஆ.சகுந்தலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக