வெள்ளி, 27 ஜனவரி, 2017

மண்

குறள் நெறிக்கதை                      

            சென்னையிலிருந்து புறப்பட்ட விரைவுப் பேருந்திற்குள் மொ்சி தன் 
கணவன் அந்தோணியின் தோள்சாய்ந்து மடியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையை வருடியபடி வெளியில் வேடிக்கை பார்த்தாள்.
            என்னவென்று தெரியவில்லைஇப்பொழுதெல்லாம் அடிக்கடி தாத்தா 
நினைவிற்கு வருகிறார் யார் தடுத்தும் கேட்காமல் அழுதுஅடம்பிடித்து 
இதோ... கிராமத்திற்கும் போய்க்கொண்டிருக்கிறாளென்றால் அதற்குக்
 காரணம் அவள் தாத்தா அற்புதம்தான்பெயருக்கேற்ற குணமுடையவா்
            ஜன்னலுக்கு வெளியே கட்டிடங்கள் பின்னோக்கிச் சென்று 
கொண்டிருக்க அவள் நினைவுகளும் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன
எங்கிருந்தோ பறந்து வந்த மண்துகள் கண்ணில் விழஅதை இலாவகமாய் 
விரல் நுனியில் எடுத்துப்பார்த்தாள்கண்ணை உறுத்திய மண்துகள் கையில்
 எடுத்ததும்மனதை உறுத்த ஆரம்பித்துவிட்டதுபத்து ஆண்டுகளுக்கு முன்புதாத்தா சென்னையில் சிலமாதம் தங்கியிருந்தபோது நடந்த சம்பவத்தை 
நினைவூட்டியது மண்துகள்.
            “ஏன் தாத்தாஎப்பப் பார்த்தாலும் அம்மாக்கிட்ட ‘ஊருக்குத் திரும்பிப் 
போய்டுறேன்கிராமத்துக்குப் போகனும்னு ஆசையாயிருக்குன் 
செல்லிட்டிருக்க... இத்தன வருஷமா அங்கதானே இருந்தஉனக்கு
 இங்கயிருக்கப் பிடிக்கலையா தாத்தாஎங்களோடயிருக்கனும்னு உனக்கு 
ஆசையேயில்லையா தாத்தாஊரில பெரியம்மா வீடுதான் உனக்கு 
பிடிச்சிருக்கு போல....” கண்கலங்கியபடி கேட்ட பேத்தி மெர்சியை 
வாரியணைத்துக் கொண்டார் அற்புதம்.
            “உங்களோடயிருக்குறதுக்கும் எனக்கு ஆசைதான்மாஆனா....”
          “என்ன தாத்தா ஆனாஆவன்னான்னு உனக்கு இந்த சிட்டி லைஃப்
 பிடிக்கலஇதானே உண்மை
            “ஆமாண்டா கண்ணு என்னதான் கிளியைப் பிடிச்சு தங்கக் கூண்டுக்குள்ள
 அடைச்சி வைச்சாலும் கிளிக்கு கூண்டு கூண்டுதானேகிட்டத்தட்ட இப்போ
 என் நிலைமையும் அப்படிதான்மாநா பொறந்து வளா்ந்துவாழ்ந்த மண்ண 
இத்தினி மாசம் நா பிரிஞ்சிருந்ததேயில்ல.. என் கடைசி மூச்சு அந்த மண்ணுலதான் போகணும் இந்த அப்பார்ட்மென்ட் வாழ்க்கை எனக்கு ஒத்துவரலமா” 
 பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கும் குழந்தையின் விசும்பலோடு 
வார்த்தைகள் விழுந்தன.
            “அதுக்கு ஏன் தாத்தா அழுவுறகற்காத்தக்குடி போய் கொஞ்ச மண்ண
எடுத்துட்டு வந்துடலாம்அத உன் கூடவே எப்பவும் வைச்சுக்க தாத்தா” என்று கெஞ்சலோடு கேட்டதும் சிரித்து விட்டார்;   அற்புதம்.
            “அட கிறுக்கு கழுத... அங்கயிருக்குற மண்ண இங்க கொண்டாந்துபுட்டா 
சரியாப் போச்சாஅந்த மண்ணுல வாழுற மாதிரி  ஆகுமா?” என்ன தாத்தா
 அப்பயிருந்து ‘மண்ணு மண்ணுனு புலம்பிட்டிருக்க... நம்ம கால்லகிடந்து 
மிதிபடுற மண்ணுல என்ன ‘சூப்பா் பவா்’ இருக்குது?” கிண்டலாய்ச் சிரித்தாள்.
           “மண்ண சாதாரணமா நினைக்காதடா குட்டிமாகடவுள் உலகத்தைப் படைக்குறப்போ முதல்நாள் முதல் வேலையா விண்ணுலகையும் மண்ணுலகையும்
 படைச்சார்னு நீ பைபிள்ல படிச்சிருப்பியே... நா சின்ன புள்ளையாய்
 இருக்குறப்போ மண்ணு தின்னு எங்கதாத்தாகிட்ட அடி வாங்கிருக்கேன்
ஆனா அப்ப எனக்கு ஒன்னும் ஆனதில்லஆனா இப்பதான் மனுசங்க 
தன்னோட மனசைப் போலவே மண்ணையும் நஞ்சாக்கிட்டாங்க இப்போ
 உங்கள மாதிரி வீடியோ கேம்ஆண்ட்ராய்டு கேம்லாம் நல்ல வேளை எங்க 
காலத்துல கிடையாதுமண்ணுலதான் எங்க விளையாட்டு எல்லாமேபொம்ம செஞ்சுகூட்டாஞ்சோறு சமைச்சுமண்ண குமிச்சு அதுல கல்லு ஒளிச்சு 
வைச்சுகோலிகபடிகில்லினு எங்களோட விளையாட்டு எல்லாம் மண்ணுலதான்.  விளையாட்டுல விழுந்து காயம்பட்டாலும் மண்ண சலிச்சு காயத்துல போட்டா அம்புட்டு சீக்கிரத்துல காயம் ஆறிப் போயிடும்கை ரெண்டையும்
 மடக்கி தலகாணியாக்கி ஆத்து மணல்ல படுத்துறங்குறது ஆத்தா மடியில
 படுத்துறங்குறது மாதிரி அம்புட்டு சொகமாயிருக்கும்... பொறப்புலருந்து
சாவுற வரைக்கும் ஏன் செத்த பின்னாடியும் நம்மள தாங்குற தாய்மா மண்ணுபஞ்ச பூதங்கள்ல முதல்லயிருக்குற இந்த மண்ண எடுத்துதான் கடவுள் 
மனுசனையே படைச்சாரு... எத்தனையோ மன்னாதி மன்னனுங்க மண்ணை ஆளுறதுக்கு போட்டி போடுவானுவ.. கடைசில ஜெயிச்தென்னவோ மண்ணுதான்அவுங்களுக்கே இந்த நிலைனா நிலமோசடிநில அபகரிப்பு
மணற்கொள்ளைனு அட்டூழியம் பண்றவங்களுக்கு என்ன நிலை 
காத்திருக்கோ?  
மனுசனோட அடிப்படைத் தேவை உணவுஉடைஇருப்பிடம்னு எல்லாமே 
மண்ணு நமக்குக் கொடுத்த பிச்சை மண்ணு நமக்கு கடவுள் கொடுத்த 
பொக்கிஷம்மனுசனுக்கான அடையாளம்.
            பத்துமணி நேரம் தாத்தாவின் நினைவுகளில் மூழ்கிய பேருந்து கிராமத்திற்கு வந்த பிறகுதான் சுய நினைவிற்கு வந்தாள்பேருந்திலிருந்து
 இறங்கியதும் நேராக தாத்தாவின் கல்லறை முன்பு மண்டியிட்டு மண்ணை 
முத்தமிட்டாள்.  தன் மகனை மண்ணில் கிடத்தி கல்லறை மண்ணெடுத்து
நெற்றியில் சிலுவையிட்டாள் “மண்-மனுசனின் அடையாளம்,  இறைவன் கொடுத்த பொக்கிஷம்” அவளையறியாமல் உதடுகள்
 முணுமுணுத்தன.
     
 குறள்:        அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
                        இகழ்வார்ப் பொறுத்தல் தலை (151)
      பொருள்:
                    தம்மைத் தோண்டுபவா்களையும் தாங்கி நிற்கின்ற நிலத்தைப் போல தம்மை இகழ்வாரைப்        பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது.



                                                    ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக