தேசியக்கருத்தரங்கம் - 2016
தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் நுண்கலைத்துறை சார்பில் “தமிழ்ப்பண்பாட்டில்
கலைகளின் பங்கு” என்னும் தலைப்பில் 16.12.2016 அன்று தேசியக்கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. தமிழ்ப்பண்பாட்டு
மைய இயக்குநா் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவா்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாண்பமை
துணைவேந்தா் பேரா.சொ.சுப்பையா அவா்கள் தலைமையில் கலைமாமணி டி.ஆர் மகாலிங்கம் அவா்களின் புதல்வி டி.ஆர்.எம்.சாவித்ரிமகாலட்சுமி அவர்கள் “இசைத்தமிழ்
வாழ்வில் இனிமை தரும் தமிழ்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்க
ஆய்வுக்கோவையைச் சிறப்பு விருந்தினா் வெளியிட துணைவேந்தா் பெற்றுக்கொண்டா். நுண்கலைத்துறை
இயக்குநா் கலைமாமணி முனைவா் மா.சுப.சரளா அவா்கள் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும்
மேற்பட்ட ஆய்வாளா்கள்
ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினா். இதன்
பின் சப்பானைச் சார்ந்த “தயெகோகுரோகவா”
என்பாரின் பறை இசை நிகழ்வு மின்திரையில் வழங்கப்பெற்றது.
நிறைவு விழாவில் முனைவா் கா.கணநாதன் அவா்கள் வரவேற்க, பல்கலைக்கழகப்
பதிவாளா் தலைமையேற்க ஆட்சிக்குழு உறுப்பினா் முனைவா் நாராயணமூர்த்தி அவா்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பேரா.நா.வள்ளி (மேனாள்
முதல்வா் இராமசாமி தமிழ்க் கல்லூரி) அவா்கள்
கருத்தரங்க மதிப்புரை வழங்க முனைவா்
மு.சு.கனகதாரா அவா்கள் நன்றி
கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தமிழ் அடையாளப் பணி தொடர வாழ்த்துக்கள். பதிவுகள் பிழையின்றி வருவதற்குப் பேராசிரியர் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தலாம்.
பதிலளிநீக்குதமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தேமதுரம் மின்னிதழில் வெளியாகியுள்ள படைப்புகளை வாசித்தேன். நல்ல நல்ல பதிவுகள் அவை. தொடர்ந்து தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புத் தொடர்பாகச் சிந்தித்து எழுதுங்கள். ஓர் இதழைத் தொடர்ந்து பதிப்பித்து வருவது என்பது எவ்வளவு கடினமான பணி என்பதை நான் நன்கு அறிவேன். பதிப்புக்குழுவில் உள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு