தி.பி-2048 (கி.பி.2017)
தைத்திங்கள் (சனவாி)
தேன்:1
துளி:1
ஒளி படைத்த கண்ணினாய்.... உறுதி கொண்ட நெஞ்சினாய்..
அன்பிற்கினியவா்களுக்கு,
இனிய நல்வணக்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையஆய்வாளா்கள் நாங்கள் திக்கெட்டும் முழங்கட்டும் தேமதுரத் தமிழோசைஎன்னும் பொறிக்கோளோடு தேமதுரம் என்னும் மின்னிதழைஇத்தைத்திங்களில் துவங்கியுள்ளோம். பண்பாட்டு விழுமியங்களைப்பரவலாக்கும் வேள்வியில் நாங்கள் மூட்டியிருப்பது ஒரு சிறுபொறி மட்டுமே..இச்சிறுபொறி தமிழ்ப் பண்பாட்டை இளையோரிடம் எடுத்துச் செல்லும் பெருநெறியாய் அமையும் என்பது திண்ணம். “தைபிறந்தால் வழிபிறக்கும்“ என்ற சொலவடை நீண்ட நெடுங்காலமாய் நம் பேச்சு வழக்கிலிருக்கிறது.வலிகளோடு மட்டுமே உடன்படிக்கை செய்து கொண்ட நமக்கு இந்த “தை“ யில்புதிய பாதை இளைய சமுதாயத்தால் திறக்கப்பட்டிருக்கிறது. சல்லிக்கட்டுதடையை நீக்கக் கோரி சமூகவலைத்தளங்களின் மூலம் ஒன்றிணைந்த தமிழகமாணவா்கள் - இளைஞா்களின் தன்னெழுச்சிப் போராட்டம் உலகம் முழுக்ககவன ஈா்ப்பைப் பெற்றுள்ளது. பொதுவாக, உணா்ச்சிகள் மேலோங்கபொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் போராட்டங்களிலிருந்துமாறுபட்டு, அறவழியில் பொதுமக்களுக்கு இடையூறின்றி இராணுவக்கட்டுக்கோப்போடு நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் எல்லோரதுபுருவத்தையும் உயா்த்த வைத்துள்ளது. எனவே தான் கிராமங்கள், நகரங்கள்,பெருநகரங்கள் என எல்லாத் தளங்களிலும் கூட்டம் கூட்டமாய், குடும்பம்குடும்பங்களாய், கைக்குழந்தைகள் முதல் கைத்தடி ஊன்றும் முதியோர் வரைபோராட்டத்தில் பங்கேற்றனா். அதுவும் உணா்ச்சி வேகத்தில் கூடிக் கலைகின்றகும்பல்களாய் அல்லாமல் மொழி-இன உணா்வோடு ஒருமித்த குரலெழுப்பி,கொள்கையில் உறுதியோடு நின்று அதனை வென்றெடுக்கும் வலிமையுள்ளகூட்டமாய் ஒன்றிணைந்து, கட்சி போராட்டத்தலைமை இவற்றையெல்லாம்புறந்தள்ளி போராடி வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
போராட்டத்தின் பொது நோக்கம் சல்லிக்கட்டுத் தடையை நீக்கவேண்டுமென்பதாக இருந்தாலும் பண்பாட்டு அடையாளங்களை - பாரம்பரியக்கலைகளை மீட்டெடுத்தல், மரபுரிமையை - இனவுணா்வை நிலைநாட்டல்,அந்நியப் பொருட்களை - நிறுவனங்களை புறக்கணித்தல், உழவையும் -உழவா்களையும் பாதுகாத்தல் போன்ற பலவிதப் பொருண்மையில் உரிமைமுழக்கங்களைக் கேட்க முடிந்தது. விவசாயத்திலிருந்து, பண்பாட்டுஅடையாளங்களிலிருந்து அந்நியப்பட்டிருந்த மாநகர மாணவா்களை-தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்கள் நோக்கி மடைமாற்றம் செய்தபெருமையையும் இப்போராட்டம் பெற்றிருக்கிறது. பண்பாட்டை மீட்கபட்டாளமாய் மொழி- இன உணா்வோடு திரண்டிருக்கிற இளையோரைக்காணுகையில் பாரதியின் பாடல் தன்னெழுச்சியாய் செவிகளில் ஓங்கிஒலிக்கிறது.
“ஒளிபடைத்த கண்ணினாய் வா.. வா..
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா.. வா...“
தமிழ்ப்பண்பாட்டை காக்கும் இளையோரின் உரிமை முழக்கத்தில், எங்கள்தேமதுரத் தமிழோசையும் சங்கமிப்பதில் பேருவகை கொள்கிறோம்..
தோழமையுடன்,
ஆசிரியா் குழு,
தேமதுரம் - மின்னிதழ்.
ஆசிரியா்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
இணையாசிரியா்
நெ.கிருஷ்ணவேணி
துணையாசிரியா்
மு.செண்பகவள்ளி
ஆசிரியா்குழு
ஆ.அருள்சாமி
கா.சுபா
பெ.குபேந்திரன்
ஆ.சகுந்தலா
வ. மீனாட்சி
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
நன்முயற்சி.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஸ்டீஃபன் தம்பி.