பழந்தமிழா் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக்
கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது. கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல்
ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி
அதனை அகப்படுத்துதல் என்னும் ருத்தில் இதனை ‘ஏறுகோடல் என்றும்
குறிப்பிடுகின்றனா். ஏற்றினை அடக்கும் போதுஅதனால் ஏற்படும்
இடா்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்

அவனது வீரத்தைப் புலப்படுத்துவதாக அமைவதினால் ‘தழுவல்’ என்னும் சொல்லோடு சோ்த்து ஏறுதழுவல் என பழந்தமிழா்கள் குறிப்பிடுகின்றனா்.
தோற்றம்:-
சிலம்பில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் காணக் கிடைப்பதால்,
இவ்வீர விளையாட்டு இரண்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்பது நம் கருத்து. பாண்டியா்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஜல்லிக்கட்டு இருந்து வந்திருக்கிறது. பாண்டியர;களின் நாள்காட்டியில் இந்த விழா பற்றிய
குறிப்புள்ளது. ஏறு தழுவுதலை தேசிய விளையாட்டாகக் கொண்ட
இசுபெயின் நாட்டில் கூட15ஆம் நூற்றாண்டிலிருந்தான் “Bull Bitting” என்றபெயரால்குறிக்கப்பட்டு இவ்விழா தொடாந்து நடத்தப்படுகிறது என்பது இவ்விடத்தில்
குறிப்பிடத்தக்கது.

கி.முஇரண்டாயிரத்தில் ஏறுதழுவல்:-
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ்
இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.
கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி
தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம்
சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை
உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம்
மகாதேவன் போன்ற தொல்லியல் அறிஞா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

மக்களின் பொதுப்பண்பாடு:-
அக்காலத்தில் மண் அசையா சொத்து, செல்வம் என பெயா் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து, எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை)
கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம், ஆநிரை கவர்வோரும் அதை
மீட்போரும் காளையை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால்
ஆறலைக் கள்வா்களும் அரண்மனை வீரர்களான மறவா்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனா். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்த
வரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழா்களின் பொதுப்பண்பாடாகவே
அறியப்பட்டுள்ளது.

சல்லி-ஜல்லி-ஏறுதழுவுதல்:-
இசுபெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள்
நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாக விளங்கவில்லை.
முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள்.
இதை சல்லி என்பா், பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக
காசுக்களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பா். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு
அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல்,
மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின்
முந்தைய பெயா்கள்.

சல்லிக்கட்டு:-
இன்றைய நாட்களில் ஏறுதழுவல் என்பது, பொங்கல் திருநாளை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடிய பின்னா் பொதுவாகக்காளைகளுக்குப் பரிசுப் பொருள்கள் கட்டி ஊர்ப் பொதுவிடங்களில் இளைஞர் பிடிக்குமாறு விடும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. ஏறு தழுவல் இக்காலத்தில் மஞ்சுவிரட்டு,
சல்லிக்கட்டு என்னும் பெயர்களில் வழங்கிவருகின்றது.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற
வளையத்தினைக் குறிக்கும். புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும்
50 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும்
பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு
சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிகட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில்
அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.

தமிழா்களின் வீர விளையாட்டுகளில் சல்லிக்கட்டு மிகவும்
புகழ்பெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரைப் பகுதியில்
சல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. இதில்
அலங்காநல்லூர் பாலமேடு சல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். மதுரை
அருகே அவனியாபுரத்தில் தான் முதலில் அதாவது பொங்கல் அன்றே
சல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல் திருச்சி மாவட்டத்தில் கூத்தைப்பான், தஞ்சை மாவட்டத்தில் மாதாக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தத்ததன்குரிசி, போன்ற ஊர்களில் நிகழும்
சல்லிக்கட்டுகள் குறிப்பிடத்தக்கன.

முரசறைந்து தெரிவித்தல்:-
ஏறு தழுவல் ஓர் ஊர்விழாபோல் நடைபெறுகிறது ஏறு தழுவலைத் தொடங்கு முன் பறைகளை அடித்து முழங்கிப் பேரொலி எழுப்புகின்றனா்.
பறையறைந்தும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனா். சல்லிக்கட்டு நடைபெறும் நாளினை ஒலிபெருக்கியின் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்கின்றனர். பெரும் விழாவாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ல்வேறு ஊர்களைச் சோ்ந்த இளைஞா்கள் போட்டியாளராகக் கலந்து கொள்கின்றனா்.

ஏறு தழுவலுக்கு முன்:-
அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல
ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவா். ஆயர் கன்னியர் பாடும் பாடல்
ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு தழுவி
வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.
சிறப்பான காளைகள்:-
சல்லிக்கட்டிற்கென்றே மிகவும் நேர்த்தியாக வளர்த்த காளைகள்
சரந்தாங்கி, பாலமேடு, அவனியாபுரம், சந்திரப்பட்டி, திருப்பரங்குன்றம், கீழ்ச்
சின்னம்பட்டி, ஓடைப்பட்டி, திண்டுக்கல், மேலூர், திருச்சி, கோட்டுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்யேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம். இது காங்கேயம் காளைகளை விட
மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை
வளா்ப்பாளர்களான கோனார்களே (ஆயா்) வளா்த்து வருகின்றனா்.
உலகளவில் இந்திய நாட்டின் பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி
கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின்
பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு - வகைகள்:-
ஜல்லிகட்டில் இரண்டு வகைகள் உள்ளன. வாடிவாசல், வெளிவிரட்டு
என்பன அவ்விரண்டு வகைகள். முன்னதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. பின்னது வெளிவிரட்டு
எனப்படும் திறந்த வெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. பின்னதில்
மாடு எந்தப் பக்கம் இருந்து வரும், யாரைத் தூக்கும் என்று தெரியாது.
அந்த இடம் யுத்தகளத்தை ஒத்திருக்கும். சிராவயல், பலவான்குடி, திருப்பத்தூர் வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும்
ஜல்லிக்கட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சோ்ந்தவை.

ஜல்லிக் கட்டு என்ன எப்படி?
இந்த ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்துவதே ஒரு தனிக்கலை எனலாம். இந்த காளைகள் எந்த வேலையும் செய்வதில்லை. இவற்றிற்கு
பச்சரிசி மாவும், நவதானியங்களும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காளைகள் சற்றேறக் குறைய வளா்ப்பவரின் குணத்தைக்
கொண்டிருக்கும். இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சாதுவாகவே இருக்கின்றன. அதாவது, இவற்றிற்கு இது
விளையாட்டு என்பது தெரிந்தே இருக்கிறது.

இலக்கியங்களில் ஏறுதழுவல்:-
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில்
ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும்
பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல
குறிப்புகள் உள்ளன.

முல்லை நிலமும், ஏறு தழுவலும்:-
ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு.
அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும்.
அந்நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம்.
மாடுகளில் ஆண்மையுடையது எருது அதனை ஏறு என்றும் காளை என்றும்
கூறுவா். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர் நின்று தாக்கும். வலிய
கொம்புகளால் அதன் உடலைக் கீறிக் கொல்லும், இத்தன்மை வாய்ந்த
எருதுகளைக்
“கொல்லேறு“ என்றும். “ மாக்காளை“ என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.

ஏறு தழுவலின் போது ஆண்களின் நிலை:-
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளைகளைக் கண்டு
ஆயர்குலத்து இளைஞா் அஞ்சுவதில்லை அவற்றின் கொட்டத்தை அடக்க
மார்தட்டி நிற்பா் ஏறுகோள் என்பது அவா்க்குகந்த வீர விளையாட்டு அக்காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பா்.
செல்வச் சிறுவர் உயா்ந்த பரண்களில் அமா்ந்திருப்பா் ஏறுகளுடன்
போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞா்கள் ஆடையை இறுக்கிக் கட்டி
முறுக்காக நிற்பா் அப்போது முரசு அதிரும் பம்பை முழங்கும் கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும் களத்திலுள்ள
கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை கலைந்து
பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை; அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தா். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர் வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும் ஏறு சோர்ந்து விழும்.

கலித்தொகையில் ஏறுதழுவல்:-
தமிழா் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனா். வேறு
சங்க நூல்களில் காணப்பொறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே
குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.

கலித்தொகையின் முல்லைக்கலியின் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞா்களின் செயல், பரண்மீது அமா்ந்து ஏறு
தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ்வேறு
தழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

ஏறு தழுவும் ஆண்களை பண்டைக் காலப் பெண்டிர் விரும்பி மணந்தனராம். ஆயர்குலப் பெண்டிர் தெருவில் பால் மற்றும் பால் பொருட்களினை
விற்கும் பணியினை அந்நாளில் மேற்கொண்டிருந்தனா். அவ்வாறு தெருவில் அப்பெண் நடந்து செல்லும்போது, இவளின் கணவன் ஏறுதழுவிய வீரன் என
அறிந்து மற்ற ஆண்களெல்லாம் அப்பெண்ணிடம் மரியாதையுடனே நடந்துகொள்வராம். அந்நாட்களில் திருமணம் முடிப்பதற்கு ஒரு ஆடவன் ஏறு
தழுவியிருக்க வேண்டுமென்பது முக்கியத் தகுதியாகும் இவ்வாறாக
முல்லைக் கலி எடுத்தியம்புகிறது.

ஏறுதழுவலால் நிகழக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சிப் பின்வாங்கும்
இளைஞனைக் காதலித்தவளும் ஏற்க மறுப்பாள் என்பதனை,

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
மறுமையும் புல்லாளே ஆய்மகள் (கலித்.103 (63-64))
என வரும் இலக்கியப்பகுதி உணா்த்துகிறது இதனால் ஆயர்குலப் பெண்ணின் காதலும் வீரப்பண்பினைப் பின்னணியாகக் கொண்டு விளங்குதனை
உணா்தல் கூடும்.
உணா்தல் கூடும்.
ஏறுதழுவி வென்றவன்:-
ஏறு தழுவிய வீரனை மணந்த ஓர் ஆயமகள் நெய்மோர் முதலிய பால் பொருட்களை விற்றுவரச் செல்லுங்கால் இவள் கணவன் ஏறு தழுவி
வென்றவன் என்று மற்றவர்கள் பேசும் சொற்களைக் கேட்டு மகிழ்ந்து
அப்புகமுரையினைத் தாம்பெறும் சிறந்த செல்வமெனப் போற்றுகிறாள்.

“கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்
ணிமிழிசை மண்டை யுறியொடு தூக்கி” (கலித்:106(1-2))
எனத் தொடங்கும் கலித்தொகைப்பாடல் (106) வழி ஏறுதழுவலைப் பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் வீரத்தையும் காதலையும் ஒருங்கே பேணி அவற்றைத் தம் வாழ்க்கையின் அடிப்படை நிலைக்களமாகக்
கொண்டிருந்தமை புலப்படுகிறது.
கொண்டிருந்தமை புலப்படுகிறது.
மலைபடுகடாம்:-
முல்லை நில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த
எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொருதும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வா். இவ்வெருதுகளின் வெற்றியைத்
தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

“இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தன் ஊறுபடத்தாக்கிக்
கோவலா் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை (மலை. 330-335)
சிலப்பதிகாரம்:-
வளமுடைய இளைய காளையை அடக்கியவருக்கு எறியவருக்கு
உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்னமையான
கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்

‘மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம் முல்லையம் பூங்குழல் தான் (சிலம்பு. ஆய்ச்சி.கொளு.8)
என்று குறிப்பிடும்.
காளையினை அடக்குதல்:-
வீரர்கள் ஏறுகளை அடக்க முற்படுகின்றனா; சில காளைகள் தம்மைத்
தழுவ முற்படும் வீரர்களைத் தம் கோட்டால் குத்திக் குடர்சொரியச் செய்து
விடுவதுமுண்டு எருதின் சினத்தைப் பொருட்படுத்தாது பாய்ந்த பொதுவனை அவ் எருது சாடி கொம்பின் நுனியால் குத்திக் குலைப்பதனை,

“மேற்பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன்குருக்கன்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி
கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்“ (கலித்.101 (15-17))
என்று அத்தகைய காட்சியினைத் தோழி தலைவிக்குக் காட்டுகிறாள்
காளைகளுக்கும் வீரர்களுக்கும் நடந்த ஏறு தழுவல் ஏறு தழுவல்
முடிவுற்ற களக்காட்சி

“எழுந்தது துகள் ஏற்றனா் மார்பு கவிழ்ந்தன மருப்பு
ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலா்“ (கலித் 102. (21-24)
என்று அழகுற வருணிக்கப்பட்டுள்ளது. தலைவியால் காதலிக்கப் பெற்ற
வீரன் தங்கள் காளைகளை அடக்க முற்படும் வீரச் செயலைத் தனி
இடங்களிலிருந்து தலைவியா், தோழியருடன் கண்டுமகிழ்கின்றனா்

காளைகளை அடக்கும் முறை:-
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், திமில் என்னும் கொட்டேறியைத்
தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை
அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள் ஆகும்.

ஏறுதழுவலின் போது ஆடவரின் செயல்கள்:-
பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த
ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக
உறுதியளித்து சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின்
கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ்எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு
அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாகய் நிற்பா். ஈடுபடும் இளைஞர்கள் நீர;த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவா் அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள்
குத்திக்கிழிப்பது உண்டு

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு
மாடுபிடிக்க விடப்படும், அவ்வாறு அடைக்கப்பட்டிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை தலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் றிப்பிட்டுள்ளான் புலிக்குளம் காளை .

காளைச்சண்டை:
ஏறு தழுவலை ஒத்த நிகழ்ச்சிகள் காளைச் சண்டை என்னும் பெயரில் இக்காலத்தில் இசுபெயின் போன் பிற நாடுகளில் இன்றும் பெரிய அளவில்
விழாவாகவும் தொழில் முறையாகவும் நடைபெற்று வருகின்றன.
அந்நாடுகளில் நடைபெரும் செயல்கள் தமிழகத்தில் பழங்காலத்தில்
நடைபெற்ற ஏறுதழுவலைப் போலக் காணப்பட்டாலும் இரண்டிற்கும்
அடிப்படையான வேறுபாடுள்ளது இரண்டிடங்களிலும் காளைகளால் வீரர்கள் தாக்குன்டாவதும் உயிர்துறத்தலும் நிகழ்தல் கூடும் ஆனால் மேலை நாட்டு
நிகழ்ச்சியில் வென்ற வீரன் தன் வெற்றிக் குறியாக வென்ற ஏற்றினைக்
கொன்றுவிடுவது மரபு ஆகும். தமிழகத்து ஏறுதழுவலில் அன்றும் இன்றும் வென்ற வீரன் அடக்கிய ஏற்றினைக் கொல்லுவதென்பது இலலை என்பது
சிறப்புடையதாகும்.
இன்றைய நிலை
இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது வாத பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின் மனிதர்க்கு உள்ள மனப்போக்கும். மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும், அதன் இலக்கியத் தொன்மையும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே உணர வைத்துள்ளது. அதே நேரம் பணத்திற்காக வெளிநாட்டினர் முன்பாக காளைச் சண்டைகளை நம்மவர்கள் நடத்துவதையும் ஏற்பதற்கில்லை.
இசு பெயினில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தவோறே தான் உள்ளது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபபட்டிருக்கின்றன. மட்டுமின்றி மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் மிக மிகக் குறைவே. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும் அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை
என்ன செய்யலாம்?
நடத்தப்படும் வீர விளையாட்டு ஆறறிவு கொண்ட காளையோடல்லாமல் ஐந்தறிவு கொண்ட காளையோடே என்றறிந்து தக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளோடு இவ்விளையாட்டை அனுமதிக்கலாம் காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை தமிழா்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்

--பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
தமிழ்ப்பண்பாட்டுமைய இயக்குநா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக