அருள் மிகு பொன்னழகி அம்மன் கோவில்
முன்னுரை
உய்யக்கொண்டான் சிறுவயல் செட்டிநாட்டுத்
திருத்தலம்தான் குன்றக்குடிக்குக் கிழக்கேயுள்ள
சிற்றூா் நகரத்தார்க்குப் பெருமை தரும்
பாதரக்குடி, கோவிலூா் முதலிய தலங்களும் கல்வி மையமாகவும் வணிக நகரமாகவும் விளங்கும் காரைக்குடியும் இவ்வூரைச் சுற்றி அமைந்துள்ளது.
இத்தகைய தெய்வ மணம் கமழும் சூழலிலே அமைந்துள்ள இவ்வூருக்கு தனிச் சிறப்பும் பெருமையும்
அளிப்பது அருள்மிகு பொன்னழகி அம்மன் கோயில் ஆகும். இதன் சிறப்பைப் பற்றிக் கூறுவதே இக்கட்டுரையின்
நோக்கம் ஆகும்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதி அடா்ந்த காடாக
இருந்தது. ஒரு சமயம் இக்காட்டில் சிலா் ”கவளக்கிழங்கு”
தோண்டும் பணியைச் செய்து கொண்டிருந்தனா். அப்போது
ஒரு கிழங்கின் மீது கோடாரிபட்டு இரத்தம் வெளியானது. பயந்த தொழிலாளா்கள் ஊா்மக்களிடம் இதனைத் தெரிவித்தனா். மக்கள் சென்று
பார்த்தபோது அம்மன் சுயம்புவாக இருந்ததைக்கண்டு இவ்விடத்தில் கோயில் கட்டினா்.
தலப்பெருமை
சுயம்புவாகத் தோன்றிய அம்மன் லிங்க வடிவிலான
பாறையில் அமைந்துள்ளாள். அம்மனின் உடம்பில்
கோடாரி வெட்டிய தழும்பு காணப்படுகிறது. எட்டுக்கைகளில் ஆயுதங்களைக் கொண்டவளாக அமைந்துள்ளாள். தனது கழுத்தை வலதுபுறம் சற்றே திரும்பியபடியும்
மகிசாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கொடிமரத்திற்கு அருகே அம்மனை வணங்கியபடி வேதாளம்
உள்ளது. இங்கு அனுமான் இராமனின் திருப்பாதத்தைச் சரணடைந்து அவரது பாதங்களைப் பிடித்த
நிலையில் இருப்பது சிறப்பாகும்.
திருவுருவ அமைப்பு
கோயிலுக்கு முன்புறம் சிறிய கல்வடிவில்
”கல்லுச்சியம்மன்” காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு குங்கும அா்ச்சனை செய்வது விசேடம். அனுமான் ”அஞ்சலி
கஸ்தம்” எனப்படும் இராமனை வணங்கிய நிலையிலும்
பக்தர்களுக்கு அருள் தருவது போன்ற அபய கஸ்த நிலையில் பல இடங்களில் பார்த்திருப்பீா்கள்
ஆனால் இக்கோயிலில் இராமனின் திருப்பாதங்களைப் பிடித்த நிலையிலுள்ள அனுமானை இக்கோயிலில்
தரிசிக்கலாம்.
நம்பிக்கை
திருமணத்தடை நீங்க அம்மனுக்குப்பட்டு சாத்தி
சந்தனக்காப்பும், சிறப்பு வழிபாடு செய்து வணங்குவார்கள். இராமா் சன்னதியில் வேண்டிக்
கொள்ள எதிரி பயம் நீங்கி பணிவு குணம் வரும் என்பது நம்பிக்கை.
முடிவுரை
உய்யக்கொண்டான் சிறுவயலில் அமைந்துள்ள
அருள்மிகு பொன்னழகி அம்மன் முன்னொரு காலத்தில் கவளக்கிழங்கு தோன்டும் போது சுயம்புவாக
தோன்றியவள். அம்மனின் உடம்பில் தற்போதும் கோடாரி வெட்டிய தழும்பு காணப்படுகிறது இக்கோயிலில்
அமைந்துள்ள அனுமன் சிறப்பு மிக்கவராகக் காணப்படுவதே இக்கோயிலின் சிறப்பாகும். இவ்வாறாக கோயிலின் அமைப்புக் காணப்படுகிறது.
-ஆ.சகுந்தலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக