செவ்வாய், 25 ஏப்ரல், 2017

எழுத்தாளா் அசோகமித்திரன்

எழுத்தாளா் அசோகமித்திரன்
            அசோகமித்திரன்  செப்டம்பா் 22, 1931-ஆம் ஆண்டு பிறந்தவா்.  தமிழின் தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவா் இவரது இயற்பெயர் தியாகராஜன் என்பதாகும்.  1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரில்  பிறந்தவா் தந்தையின்  மறைவிற்கு பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னையில்  குடியேறினார்  இவருடைய  எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும்  கொண்டது.  இவரது கதைகள் தமிழ் இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தன.  அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது.  இவரது புதினங்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.  ஆங்கில  நாளிதழ்களில் தொடா்ந்து  எழுதிவந்த அசோகமித்திரன்,  ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுது்தாளா்களுக்கான  சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவா்.
            1996-ஆம் ஆண்டு ”அப்பாவின் சிநேகிதா்”  என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி  விருது பெற்றவா் இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும் இவரது படைப்புகள் சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவாத அமைந்திருக்கும்
இவரது சிறுகதைகள்
1. நாடகத்தின் முடிவு
2. வாழ்விலே ஒருமுறை
3. விமோசனம் விடுதலை
4. காலமும் ஐந்து குழந்தைகளும்
5. முறைப்பெண்
6. சினேகிதா்
7. பிப்லப் சௌதுரியின் கடன்
இவரது புதினங்கள்
1. பதினெட்டாவது அட்சக்கோடு
2. தண்ணீா்
3. இன்று
4. ஆகாசத் தாமரை
5. ஒற்றன்
6. மானசரோவா்
7. கரைந்த நிழல்கள்
குறும்புதினங்கள்
1.இருவா்
2. விடுதலை
3. தீபம்
4.விழா மாலைப் போதில்
v  அசோகமித்திரன் கதைகள் -  தொகுப்பு 1&2
v  அசோகமித்திரன் கட்டுரைகள் - தொகுப்பு 1&2
விருதுகள்
v  இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984இலும் என இருமுறை கிடைத்தன.
v  இந்திய இலக்கியததை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே.பிர்லா நல்கையும் 1973-74 ஆம் ஆண்டில்  அயோவா பல்கலைக் கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது
v  1992 ஆம் ஆண்டில் லில்லி நினைவுப் பரிசு
v  1993 ஆம் ஆண்டு டால்மியா அறக்கட்டளையால் இராமகிருஷ்ணா ஜெயதயாள்  அமைதி விருது
v  1996  ஆம் ஆண்டு அக்ட்சரா விருது
v  1996 ஆம் ஆண்டு அப்பாவின் சிநேகிதா் என்னும் இவரது சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.
v  2007 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா் விருது
v  2012 ஆம் ஆண்டு  மே மாதத்தில் என்.டி.ஆர்  தேசிய விருதை என்.டி.ஆர் அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.
v  2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள்  சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்க நிலை க.நா.சு விருது பெற்றார்.
v  2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ஆம் நாள் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது பெற்றார்.
ஆங்கிலப் புதினங்கள்
v  ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
(Fourteen Year with Boss)
v  தி கோஸ்ட் ஆப் மினம்பாக்கம்
(The G host of Meenambakkam)
v  ஸ்டீல் ப்ளிடிங் ஃபிரம் தி வூண்ட்
(Still bleeding from the foot)
பல படைப்புகளுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் அசோகமித்திரன் 2017-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23-ஆம் நாள் தனது 86-ஆவது அகவையில் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார் அவரின் மறைவு எழுத்தாளர்களுக்கு பேரிழிப்பாக உள்ளது.

                                                                                                                                   -வ.மீனாட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக