திங்கள், 15 மே, 2017

பழம்பெரும் நம்பிக்கைகள் பிள்ளைப் பேறு குறித்த நம்பிக்கைகள்

பழம்பெரும்  நம்பிக்கைகள்
பிள்ளைப் பேறு குறித்த நம்பிக்கைகள்
v  பிள்ளைப் பேறு இல்லாதவா்கள் (பெண்கள்) பிள்ளைப் பூச்சியை உயிருடன் பிடித்து, வாழைப் பழத்தில்  வைத்துச் சாப்பிட்டால் குழந்தை உருவாகும்.
v  கிராமங்களில் நடைபெறும் பாரதத் கூத்தின் போது தவசு ஏறும் அன்று  அா்ச்சுனன் தவசில் ஏறி அங்கிருந்து கீழே எலுமிச்சம் பழம் போடுவான் குழந்தை இல்லாத பெண்கள் தலை முழுகி ஈரத்துணியுடன் வந்து தவசு மரத்தின் கீழிருந்து முந்தானையைப் பிடித்து எலுமிச்சம்பழம் வாங்கினால் குழந்தை பிறக்கும்.
v  இறப்புச் சடங்கில் கருமகாரியம் முடித்து குளக்கரையில் இருந்து கலசம் கொண்டு வருவார்கள். அக்கலசம் கொண்டு வந்தவரை  வீட்டு வாசலுக்கு முன்பாக நிற்க வைத்து திருமணமான பிள்ளைப் பேறு வாய்க்காத பெண்ணொருத்தி தலை மூழ்கி ஈரத்துணியுடன் வந்து கலசம் வாங்கினால் அப்பெண்ணிற்கு ஒரு ஆண்டிற்குள்  குழந்தை பிறக்கும்.
             மாதம்  பருவ காலங்கள் குறித்த நம்பிக்கைகள்
v  அக்னி நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது.  மிளகாய் தூள், அரிசி மாவு, வத்தல் ஊறுகாய் போட்டால் வண்டு வைக்கும்.
v  மார்கழி மாதத்தில் திருமணம் ஆகாத பெண்கள்  விடியற்காலையில் திருப்பாவை பாராயணம் செய்து வந்தால் நல்ல கணவன் கிடைப்பான்
v  கோடைக் காலத்தில் மேல் காற்று அதிகமாக வீசினால் கடலில் மீன் அதிகமாக கிடைக்கும்.
விலங்குகள் குறித்த நம்பிக்கைகள்
v  உடைந்த முட்டையின் முழு ஓட்டினை வீட்டில்  எங்காவது ஒரு குச்சியில் கவிழ்த்து வைத்தால் பல்லிகள் வீட்டிற்குள்  வரவே வராது.
v  கிராமங்களில் இரவு நேரங்களில் பாம்பு வராமல் இருக்க வீட்டைச் சுற்றி உப்புப் போடுகின்றனா். உப்பினைத் தாண்டி நாகம் போன்ற பாம்பினங்கள் வராது.
v  கழுதையைப் பார்த்தால் கெட்ட சகுனம். கழுதை கத்துவதைக் கேட்டால் நல்ல சகுனம்.
மழை குறித்த நம்பிக்கைகள்
v  ஏா் உழும் கலப்பையை நேராக நிமிர்த்தி வானத்தை நோக்கி பிடித்தால் மழை பொழியாது பஞ்சம் ஏற்படும்.
v  மழை பொழியாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் ‘கொடும்பாவி’ என்ற பொம்மையைச் செய்து மாட்டு வண்டியில் வைத்துக் கொண்டு, ஆண்கள் பெண் வேடம் போட்டுக் கொண்டு ஒப்பாரிவைத்து மாரத்து ‘சாவுமேளம்’ ஒலிக்க  ஊா் தெருக்களில் சுற்றி வந்து எரித்தால்  மழை பொழியும்.
v  ஈசல் அதிகமான போக்கு போனால் பலத்த மழை வரும்.
v  கிராமங்களில்  மழை பொழியாமல் கடுமையான பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டால்  சாமி சிலையை உடைத்துக் கவிழ்த்துப் போட்டால் மழை வரும்.
v  தும்பி தாழ்வாகப் பறந்தால் பலத்த மழை வரும்.
v  தவளைகள் இரவு நேரத்தில் கத்தினால் பலத்த மழை வரும்.
v  நண்டு மேடெறினால் மழை வரும்.
வீடு பற்றிய நம்பிக்கைகள்
v   தெற்கு பார்த்த வாயிற்படி  வைத்து வீடு கட்டுவது நல்லது.
v  வீட்டின் தென்மேற்கு மூலை உயா்ந்து இருக்கு வேண்டும்.  தென் மேற்கு மூலை உயா்ந்து இருந்தால் குடும்பம் உயரும்.
v  வீடுகளில் சமையலறையும் பூசை அறையும் எதிரெதிராக இருந்தால் நல்லது
v  வீட்டின் பூசை அறைக் கதவுகளில் நாக்கு இல்லாத மணி பொருத்தினால் வீட்டிற்கு நல்லது.
கனவு பற்றிய நம்பிக்கைகள்
v  சூரியன் உதயமாவது போல் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.
v  மணியோசயைக் கேட்பதாகக் கனவு கண்டால் திருமணம் நடைபெறும்.
v  கண்ணாடியைக் கனவில் காண்பது நல்லது
v  காகத்தைக் கனவில் கண்டால் மரணச்  செய்தி வரும்
v  கனவில் உப்பைக் கண்டால் செல்வம் சேரும்.
வான் பொருள்கள் பற்றிய நம்பிக்கைகள்
v  அமாவாசை கழித்து மூன்றாம் நாள் தோன்றும்  மூன்றாம் பிறையை மாதந்தோறும் பார்த்தால் நீண்ட ஆயுளும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும்.
v   கிரகண காலத்தில் கருவுற்றிருக்கும் பெண் துரும்புகளை  கிள்ளக் கூடாது  கைகால் சுளுக்கு எடுக்கக்கூடாது.  அவ்வாறு  செய்தால் ஊன முள்ள குழந்தை பிறக்கும்.
v  கிருத்திகையில் ஆண் குழந்தை பிறக்கக் கூடாது பெண்  குழந்தை பிறக்கலாம்.
v  அமாவாசை, கிருத்திகை நாள்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது.
v  கிருத்திகை, அமாவாசை நாள்களில் நோய் வாய்ப்பட்டுப் பல மாதங்கள் படுக்கையாகவே இருக்கின்றவா்களுக்கு நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.  மரணமும் ஏற்படலாம்.
v  மாசி மாதத்தில் வரும் மூன்றாம் பிறை கண்ணுக்குத்  தெரியாது.

-அ.இரா.பானுப்பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக