ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி.
இப்பழமொழிக்கு ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றால் அவா்களுக்கு வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து
முடிக்கின்றபொழுது அவனிடம் பொருள் என்ற ஒன்று இருக்காது. அப்பெண் மக்களைப் பெற்ற தந்தை
கடைசியில் திருவோடு ஏந்தித்தான் வாழும் நிலை ஏற்படும் என்று தற்பொழுது பொருள் கூறப்பெறகிறது. ஆனால் இது தவறாகக் கூறப்படும் பொருளாகும். ஒரு குடும்பத்தில்
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பற்ற தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றும் உடன் பிறந்தோர்
5. சொல் பேச்சுக்கேளாத பிள்ளைகள்
என இவை
ஐந்தையும் ஒருங்கே பெற்றவன் நாடளும் மன்னனாக இருந்தாலும் தன் அளுமைத்திறன் அரசாட்சி,
செல்வம் போன்ற அனைத்தையும் இழந்து ஆண்டியாக
நேரும் என்பதே இதன் உண்மைப் பொருள்.
-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக