வியாழன், 16 பிப்ரவரி, 2017

குலதெய்வ வழிபாடு


           

                தமிழா்கள் ஒவ்வொருவரும் தமது குலதெய்வத்தைக் கண்டிப்பாக மாதம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வரவேண்டும். அப்படிச் சென்று வரமுடியாத பட்சத்தில்  வருடத்திற்கு ஒரு முறையாவது நேரில் சென்று பூசை செய்து வழிபட வேண்டும். மற்ற கோயிலுக்குச் செல்லும் போது தேங்காய், பழம், மாலை வாங்கி அா்ச்சனை செய்து திரும்புவீர்கள்.  ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வக் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அா்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.  இதைச் செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். உங்களது குலதெய்வத்தின் படத்தை வீட்டுப் பூசையறையிலும், எப்போதும் வைத்திருக்க வேண்டும்.  வீட்டில் ஒவ்வொரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். ஏனென்றால் வழிபடு தெய்வம் நிற்புங்காப்ப பொருளுரைப்பா் வ.சுப.மாணிக்கனார்.
                                                                                                                                                -ஆ.சகுந்தலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக