பாரம்பரியச் சமையல்
வெள்ளைப்
பணியாரம்
தேவையான
பொருட்கள்
பச்சரிசி - ஒரு
ஆழாக்கு (200கி)
உளுந்தம் பருப்பு - அரை
ஆழாக்கு (50கி)
எண்ணெய் - தேவையான
அளவு
பால் - சிறிதளவு (1 டீஸ்பூன்)
சீனி - சிறிதளவு (1டீஸ்பூன்)
செய்முறை
பச்சரிசியையும், உளுந்தம்பருப்பையும்
1 மணிநேரம் ஊறவைத்து அதில் பாலையும், சிறிதளவு சீனியையும் சேர்த்துத் தோசை மாவு பதத்தில்
நன்கு அரைத்துக் கொள்ளவும் பின் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்து ஏந்தலாக உள்ள
ஒரு கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் வட்டமாக
ஊற்றி, அடுப்பைக் குறைத்து வைத்து ஊற்றிய மாவைச் சிவக்க விடாமல் வெண்ணிறமாக எடுத்தால் வெள்ளைப் பணியாரம்
தயார். அந்த பணியாரத்துடன் காரச்சட்டினியைச்
சேர்த்து உண்டால் மிகச் சுவையாக இருக்கும்.
-சு.லாவண்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக