வியாழன், 16 பிப்ரவரி, 2017

தமிழாயிரம் - அதிகாரம் -2


தமிழ்த் தோற்றம்

1.  நீ யென்ன நானுந்தான்!  நீள்தமிழ் போற்றாமல்
    சீயென்று தள்வோமோ சேர்ந்து?

2. சேர்ந்த தமிழன் செறிந்த குறிப்புகளால்
   நோ்ந்து மொழிந்தான் நினைத்து.
                                                                                                                                                          
3. நினைத்த முக்குறி கைக்குறி நேர்ந்த
   வினைக்குறி என்றறி வித்து.

4.  வித்து முளைத்து விளைவாகும் நீா்மைபோல்
     கொத்தாய் முளைத்த குறி.

5. குறியே  ஒலியாய் ஒலியின் பொருளாய்
    நெறியாய் அமைந்தது நேர்.

6. நேரில் அறிந்ததை நேரில் இலாதாரும்
   நேரறிய நீண்டது நா.

7.  நாவால் ஒலித்தான்; மிழற்றினான்;  பின்னதுதான்
    பூவாய் மலா்ந்த பொழில்!

8.  பொழில் தான் பொதுமப் பொழிமொழியாய்ப் பல்லோர்
     வழியே வளர்ந்தாள் தமிழ்.

9.  தமிழென்ப தென்ன  ‘அழிழ் தமழ்’ தென்ன
    இமிழ்த்த இசையே இது.

10.  இது நாள் வரையும் இயனிலை மாறா
     ததுதான் இருத்தல் அறி.
-இளவழகனார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக