தலையங்கம்
தி.பி.2048 (கி.பி.2017) மார்கழித் திங்கள்
தேன் - 1
துளி-12
மாதங்களில்
நான் மார்கழி என்பான் கண்ணன். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் மார்கழி மாதத்தில்
நோன்பிருந்து பாடிய திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் மார்கழி நீராடலின்
சிறப்பினைக் குறிப்பிடுகின்றன.
திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்தோடு
கூடிய நிறைமதி (பெளா்ணமி) நாளில் உபவாசம் இருந்து நோற்பதாகும். சிவனுக்கு உரிய நட்சத்திரம்
திருவாதிரை ஆகும். இதனைக் கருதியே சிவனை ஆதிரையின்
முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவா்.
திருவாதிரை
நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என்ற சொலவடை தென்
தமிழகத்தில் உண்டு.
மார்கழி
மாதத்தில் தில்லையில் கோயில் கொண்டருளியுள்ள நடராசப் பெருமானைத் தரிசிக்கத் தேவா்கள்
ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு. ஆதிரை என்பது
திருவாதிரை தினத்தில் நடராஜப்பெருமான் தேரில் வீதிவலம் வருவதை ஆருத்ரா தரிசனம் என்பா். ஏகாதசி விரதம் இம்மாதத்திலேயே கடைப்பிடிக்கப்படுகிறது.
ஓசோன்
படலமானது மார்கழி மாதத்தில் பூமிக்கு மிகவும்
நெருக்கமாக வருகிறது அதனால் தான் நம் முன்னோர் இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடல்
இறைவனைத் துதித்தல், கோலம்இடுதல் போன்றவற்றைச் செய்துள்ளனா். இதனால் மனிதா்களுக்கு நலம்
கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழமையுடன் ,
தேமதுரம் ஆசிரியா்குழு,
ஆசிரியர்
ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
இணையாசிரியர்
பெ.குபேந்தரன்
துணையாசிரியர்
மு.சிவசுப்பிரமணியன்
ஆசிரியர் குழு
கா.சுபா
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
தே.தீபா
ந.முத்துமணி
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக