கொள்ளு புட்டு
தேவையான பொருட்கள்
1. கொள்ளு - அரைகப்
2. தேங்காய்த் துருவல் - கால்
கப்
3. பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
4. பெருங்காயத்தூள் - தேவையான
அளவு
5. கடுகு - சிறிதளவு
6. எண்ணெய் - தேவையான
அளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொள்ளுவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து
காலையில் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில்
போட்டு புட்டு மாவு போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இட்லி தட்டில்
மாவை கொட்டி வேக வைத்து உதிரியாக்கிக் கொள்ள வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு பச்சை
மிளகாய், பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சோ்த்து
தாளிக்க வேண்டும். அதனை கொள்ளு மாவில் ஊற்றி
கிளறி தேங்காய் துருவல் கலந்து சுவைக்காம்.
-க.கலைச்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக