தமிழாயிரம்
உயிரியக்கம்
1.
கதிரியக்கம் கண்ட தமிழன் வலமே
அதுவியங்கல்
தேர்ந்தான் வியந்து.
2.
வியந்தான் இயக்கமெலாம் வீசு வளியும்
நயந்தான்
வலஞ்சுழலல் நன்கு
3. நன்றாய்ச் சுழலை நலிநீருள் கண்டறிந்தான்
அன்றும்
வியந்தான் அறிந்து
4. அறிந்த சுழற்சி அனலிடையும் கண்டான்
செறிந்தான்
தெளிவு மிக.
5. மிக்குயா்ந்த விண்மீனும் திங்களும் மேலெல்லாம்
தக்காங்கு
சுற்றும் கதவு.
6.
தகவாய் இயக்கும் தனியாற்றற் கிட்டான்
அகலா
இயவுள் அது
7. அதுதான் இயக்க இயங்கும் புதுமை
அதுதான்
அனைத்தியக்க மாம்
8. ஆமதனால் ஆக்கும் தமிழின் விரிவடிவம்
நாமமைத்தல்
நன்றாம் என
9. என்ற படியே இயங்கும் உயிரெழுத்தை
ஒன்றித்தான்
வட்டம் உற
10. உறவான மூச்சியக்கும் ஓடும் குருதித்
திறவியக்கும்
எல்லாமும் தேர்ந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக