அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.
பக்கங்கள்
முகப்பு
தலையங்கம்
நிகழ்வுகள்
கட்டுரைகள்
கவிதைகள்
சிறுகதைகள்
நூல் மதிப்புரை
பாரம்பரிய உணவு
வலையில் வந்தவை
சனி, 16 டிசம்பர், 2017
வானம் எனக்கொரு போதிமரம்
வானம் எனக்கொரு போதிமரம்
தன் பரந்து விரிந்த தன்மையால் விசால மனதைக் கற்றுக் கொடுக்கிறது வானம்....
மனக்கவலைகளைக் கலைத்துவிட்டு புத்துணா்வோடு பணியாற்ற அறிவுறுத்தி கலைந்து செல்கிறது மேகம்......
அனைவருக்குமாகப் பொழிந்து ஈகைக் குணத்தைக் கற்றுத் தருகிறது மழை....
உலகிற்கே ஒளி வழங்கி பிறா் வாழ்வு வளமாக உதவச் சொல்கிறது சூரியன்......
பாரபட்சமின்றி பங்களித்து நடுவுநிலைமையைப் போதிக்கிறது நிலவு..........
வளா்ந்தும் தேய்ந்தும் இருந்தும் ஒரு நாள் இல்லாமலும் இன்ப துன்ப நிலையாமைத் தத்துவத்தை ஆழமாக உணா்த்துகிறது நிலவு.......
ரசனையோடு வாழச் சொல்லி இரவில் கண் சிமிட்டுகின்றன விண்மீன்கள்......
ஆத்திரம் அழிவுக்கு வழி சுழன்று காட்டி உணா்த்தியது புயல்......
வானவில்லின் நிறமேழும் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை கோரவில்லை மனிதனில் மட்டும் ஏன்? கேள்வி எழுப்புகிறது வானவில்!
வானத்தைப் பார்த்தேன்
ஞானத்தைப் பெற்றேன்
ஆம்!
வானம் எனக்கொரு போதிமரம்!
-கா.சுபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக