பழமொழி உண்மைப்பொருள்
ஆயிரம் பொய்சொல்லி யாவது ஒரு கல்யாணத்தை நடத்தவேண்டும். என்று ஒரு பழமொழி வழங்கி வருகிறது. இது எத்தனை பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி
விடவேண்டும் என்று தவறான ஒரு பொருளைத்தருகிறது.
பொய்மையில் கட்டப்படுவது நிலைத்து நிற்காது. ஏனெனில் திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்றும்
கூறும் மரபும் நம்மிடையே உள்ளது. எனவே ஆயிரம் காலத்துப் பயிரைக் காக்க இந்த ஆடவனும் பெண்ணும்
திருமண பந்தத்தில் இணைகின்றார்கள் என்பதை ஓராயிரம் பேருக்காவது தெரியப்படுத்துவது என்றும்
நோக்கில் ஆயிரம் முறை போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்த
வேண்டும் என்பதே அப்பழமொழியின் உண்மைப் பொருளாகும்.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக