காவிரி புஷ்கரம்
காவிரி
புஷ்கரம் என்பது கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பாயும் காவிரி நதியினை போற்றும் வகையில்
இந்த விழா கொண்டாடப்படுவதாகும்.
புஷ்கரம்
என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மீகத் திருவிழா குரு
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு
உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபாகும்.
புராணப்படி
ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு.
இந்த ஆண்டு குருபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் இராசிக்கு மாறியிருக்கிறார். அதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர
விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
கொண்டாடப்படும் புஷ்கர விழா இந்த வருடம் 12-வது முறையாகக் காவிரியில் நடைபெறுவதாச்
சொல்லப்படுகிறது. 144 வருடங்கள் ஆனதால் இதை
“மகா புஷ்கரம்” என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
புஷ்கரம்
என்பது பிரம்ம தேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம் உலக மக்கள் நீராடிப்
புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான் அதற்காக பிரம்ம
தேவரை வேண்டி தவம் இருந்தார் குருபகவானின் தவத்துக்கு இறங்கிய பிரம்ப தேவா் அவருக்கு
முன்பு தோன்றி ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார் குருபகவானும் பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும்
புஷ்கர தீர்த்தம் வேண்டும் என்றார்.
108
வைணவ தேசங்களில் பெரும்பாண்மையான ஆலயங்கள் காவிரி நதிக்கரை யோரத்தில் அமைந்துள்ளது. பக்கதர்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி நதி பாயும்
எந்த இடத்திலாவது நீராடி நியாயமான கோரிக்கைகளுடன் வேண்டிக் கொண்டால் நிச்சியம் நடைபெறும். இந்த புஷ்கரம் நடைபெறும் காலத்தில் அனைத்து நதிகளும்
காவிரி நதியுடன் சங்கமிப்பதால் நமது பழை தீவினைகள் நீங்கும்.
புஷ்கர
புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா,
தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரைக் கோடி நிர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும் இந்த
நாட்களில் அன்னதானம், வாய்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து
நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும் புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பித்ருக்களுக்கு
தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பித்ருசாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும்
என்று நம்பப்படுகிறது.
மஹாபுஷ்கரம்
இந்த ஆண்டு நடைபெற்று இந்த புஷ்கரம் விழா (12) பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இதில்
பல இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தன் பாவங்களை நீக்கினார்கள்.
காவிரி புஷ்கரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக