வியாழன், 12 அக்டோபர், 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
இரண்டாம் நூறு
II தமிழ் எழுத்து

1. வீறெய்து மாந்தன் விரிவாய் அகலத்தான்
    கூறகரம் கொண்டான் குளிர்ந்து

2. குளிர்ந்தான் அதுநீளக் கூடுதலும் கேட்டான்
   தளிர்த்தான் குறில்நெடில் தாம்.

3. தாமே ஒலிக்கும் இகரமோ டீகாரம்
   ஆமா றறிந்தான் அவன்.

4. அவனே உகரமோ டூகாரம் கேட்டான்
  உவந்தான் உ..ஊ என.

5. என்ன எழுந்த எகரமோ டேகாரம்
    துன்னிய ஐயோடௌ வை

6. அவைஒகர ஓகாரம் அஃகென் றொலிக்கச்
  செலிக்கொண்டான் சோ்ந்தான் செறித்து

7. செறிந்த இறுத ஒலிநுண்மை ஆய்ந்து
  குறித்தான் தனிநிலை யாய்

8. ஆய்தம் தனிநிலை முப்புள்ளி ஒற்றென்ன
  வேய்ந்தான் பெயா்கள் பல.

9. பலுக்கும் ஒலிகேட்டு வன்மை இடைமை
   மெலிமெய்யாய்ப் பேர்வைதான் மூன்று

10. மூன்று வகையும்மூ வாறாய் முடிந்திட

  ஏன்றமைத் தான்பதி னெட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக