தலையங்கம்
தி.பி.2048 (கி.பி.2017) ஐப்பசித் திங்கள்
தேன் - 1
துளி-10
தீபஒளித் திருநாள்
இந்துக்கள்,
சீக்கியா்கள், சமணா்கள் சமய அடிப்படையிலும் ஏனைய தமிழா்கள் காலாச்சார அடிப்படையிலும்
கொண்டாடப்படும் பெருவிழா தீபஒளித்திருநாளாகும்.
இப்பண்டிகையானது ஐப்பசி மாதத்தில் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த
சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்
தினம் நகர சதுர்த்தசி அன்று கொண்டாடுகின்றோம்.
பெரும்பாலான ஆண்டுகளில் இவ்விழாவானது ஐப்பசி மாதத்திலே வரும். கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபா் மாதம் 17 லிருந்து
நவம்பா் மாதம் 15-ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகின்றது. திருமாலின் கிருட்டிணன் அவதாரத்தில் நரகாசுரன் என்ற
அரக்கனை கொன்ற தினத்தினை நரகாசுரனின் இறுதி விருப்பப்படி அவன் இறந்த தினத்தினை தீபஒளித்
திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்.
இந்தியா,
நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூா், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு
விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்துக்கள்
மட்டுமின்றி சீக்கியர்களும், சமணா்களும் கூட
இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்கான கொண்டாடுகின்றனா். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழா்கள் இத்திருநாளினை
கோலாகலாமாகக் கொண்டாடுகின்றார்கள்.
தீபாவளி
எனப் பெயர் பெறக் காரணம், ‘தீபம்’ என்றால் ஒளி விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை வரிசையால்
விளக்கேற்று, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி என்பதாகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும்
வாசம் செய்து அருள் தருவதாய் மக்கள் நம்பிக்கை ஆகும். ஒவ்வொருவா் மனதிலும் இருள் உள்ளது அகங்காரம், பெறாமை,
தலைக்கணம் போன்ற இருளினை அவ்விளக்கினில் ஏற்றி எரித்திட வேண்டும்.
தீபாவளி
கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றா். கிருட்டிணன் நரகாசுரன் என்னும் அரக்கனைக் கொன்ற
போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் மென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க
தீபாவளி மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
ஸ்கந்த
புராணத்தல் படி, சக்தியின் 21நாள் கேதாரகௌசி விரம் முடிவுற்றது இத்தினத்தில் தான் விரதம்
முடிவடைந்த பின்னா், சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்த நாரீஸ்வரர்,
உருவமெடுத்தார். நமக்குள் இருக்கக் கூடிய இறைவன்
சோதி வடிவாக நம்முள் இருக்கிறான் இந்த சோதிவடிவான இறைவன் வழிபடுவதற்கான சிறப்பு நாளே
தீபாவளியாகும்.
1577-ல்
இத்தினத்தில் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் தீபாவளி திருநாளில்
கொண்டாடுகின்றனா். மகாவீரர் நிர்வாணம் அடைந்த
தினத்தை நினைவு கூர்ந்து தீபாவளி தினத்தைச் சமணா்கள் கொண்டாடுகின்றனா்.
மேற்கு
நாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்ற இந்து விழாக்கள் போலல்லாது அனைத்து இந்து மக்களும்
ஏதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம்
கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது இங்கு இது ‘Festival of Lights’ என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில்
ஒன்றாக திகழ்ந்து வருகின்றது
இத்தீப
ஒளித் திருநாளில் நமக்கு வருகின்ற அனைத்து
துன்பங்களையும் தீபத்தில் ஏற்றி எரித்து விட்டு இன்பமாக வாழ்வோம்! இந்த வருடத்தில்
இருந்து தேமதுரக்குழுவும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் உங்களோடு கைகோற்கிறது எங்கள் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு
மைய ஆசிரியா் குழு. அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்..
தோழமையுடன்
,
தேமதுரம் ஆசிரியா்குழு,
ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
இணையாசிரியர்
பெ.குபேந்தரன்
துணையாசிரியர்
தீபா
ஆசிரியர் குழு
கா.சுபா
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக