தற்கொலையைக் கொலை
செய்யுங்கள்
‘எதையாவது செய்து கொண்டு
எப்படியாவது செத்துவிட வேண்டும்’ என்ற விரக்தியின் உச்சத்திலிருந்த தவசீலனுக்கு
தற்கொலைவெறி தலைக்குள் எகிறிக் கொண்டிருந்தது.
தன்னுடன் படித்தவா்களெல்லோரும் நிரந்த வேலை கிடைத்து. திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளுடன் காரில் உலா
வரும்பொழுது தான் மட்டும் தன்னந்தனியாய் வேலையில்லாமல் திரியும் வேதனையை தவசீலனால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை. பூமிக்கு பாரமாய்
சாமிக்குத் தூரமாய் இருக்கும் ஒரு வாழ்க்கை வேண்டவே வேண்டாமென்று தீர்க்கமாய் முடிவெடுத்துவிட்டான். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் எங்கே? எப்படி? என்பது தான் தெரியவில்லை. விஷமா? தூக்கா? தண்டவாளமா? தீக்குளிப்பா? இல்லை..
‘ப்ளுவேல் விளையாட்டா? எந்த முடிவிற்கும் வர முடியாமல் கூகுளிடமே கேட்டுவிடலாமென்று தற்கொலைச் என்று தட்டச்சிடும் போதே ‘தற்கொலை செய்து
கொள்வது எப்படி?, தற்கொலை செய்ய எளிய வழிகள், தற்கொலை செய்வது எப்படி? என்னும் கேள்விகள் திரையில் பளிச்சிட்டது. ‘அடப்பாவிங்களா, மேல அனுப்பி வைக்குறதுல ரொம்ப விசுவரூபமெடுத்து
தவசீலனை விழுங்க ஆரம்பித்தது. அறைக்கதவு உள்ளே
தாளிட்டிருந்ததால் உதவிக்குக் கூப்பிடவும் வழியில்லை. கனவா? நிஜமா? தான் தொண்டை கிழிய கத்தி அலறுவுது
தன் காதுகளுகு்கே கேட்கவில்லையே.. இதென்ன விபரீதம்? இப்படியும் நடக்குமா? விதிர்விதிர்த்து
உடல் நடுநடுங்கும்போது கணினி முழுதாய் விழுங்கி தானிருந்த அறை முழுக்க மறைந்து போய்,
வேறொரு உலகிற்குள் புகுந்தது போலிருந்தது.
ஒருவேளை.. அதிர்ச்சியிலே செத்துப்போய் விட்டோமோ? இது சொர்ககமா? நரகமா? அவசரப்பட்டு சாவை அழைத்துவிட்டோமோ? நாம் மட்டுமா வேலையில்லாமலிருக்கிறோம்? இலட்சோப
இலட்சம் பேர் வேலையில்லாமலிருக்கிறார்கள்.. அவா்களெல்லோரும் தற்கொலை முடிவையா எடுத்தார்கள்?
தற்கொலை செய்து கொண்டவா்களெல்லோரும் இங்குதானிருப்பார்களோ? கனவிலும் இதுவரை பார்த்திராத வேற்று கிரகத்திற்குள்
நுழைந்துவிட்டது போலிருக்கிறதே.. ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி
நின்றான் தவசீலன்.
கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தவன் எதிரே ‘தற்கொடைப் போராளிகள்’
என்ற பலகை தென்பட்டது. தற்கொலைப் பேராளிகள்
என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன
தற்கொடைப் போராளிகள் தன்னையே உயிர்த்தியாகம் செய்து சமூகத்திற்காய் உயிரிழந்ததால் இப்படி
எழுதியிருப்பார்களோ? உள்ளே போகலமா? வேண்டாமா?
யோசிப்பதற்குள் கதவு திறந்து உள்ளே அவனை இழுத்துக்
கொண்டு ஒரு கை, நினைத்தது போலவே தற்கொடைப் பேராளிகள் கூட்டமாய்க் குழுமியிருந்தார்கள்,
வேலுநாச்சியார்க்கு வெற்றி ஈட்டித்தர ஆங்கிலேயரின் ஆயுதக்கிட்டங்கியை உருத்தெரியாமல்
அழித்த ‘குயிலி’ மொழிப் பேராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்விட்ட சிவகங்கை இராசேந்திரன்
வந்தான், ‘ஐயா.. நீங்க எங்க ஊர்க்காரர்தானே..’
என்று கேட்டான். ‘ஐயா.. சாமிகளா.. சாதியையம்,
ஊரையும், உறவையும் சொல்லி உரிமை பாராட்டாதீங்க.. ‘நாம் தமிழா்’னு சொல்லுங்க.. அதுபோதும்..
என்றார் சிவகங்கை இராசேந்திரன் குயிலியின் கோபம் இப்பொழுது புரிந்தது. ‘எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் தாய்மொழியிடம்
பற்றுக் கொள்ள வேண்டும். ‘மொழி பல கற்கச் செல்லுங்கள். ஆனால் முத்தமிழ் உயிராச் சொல்லுங்கள்’ என்ற வீறுகவியரசர்
முடியரசனாரின் வரிகளை நெஞ்சில் நிறுத்தாமல் மொழியில் அரசியலைக் கலந்து விட்டார்கள்’
என்றார் இராசேந்திரன்.
‘பெரும்பாவிகள் வெளியேயும், அப்பாவிகள் உள்ளேயும் இருக்கிறார்கள்’
என்று வேதனைப் பட்டார் செங்கொடி.
‘அரசியல் வாதிகளுக்கு ரூபாய் நோட்டின் மீதிருக்கும் கவனம், மட்டும்தான்
தொடா்ந்து பேராடுகிறார். தமிழ்நாட்டு மக்களின்
தற்போதைய கவனம் கேரள ஜிமிக்கி, கம்மலின் மீது படிந்திருக்கிறது’ கிண்டலாய்ச் சிரித்தார் ஐயா சசிபெருமாள்.
அடுத்து நின்ற முத்துக்குமார் ‘போல டாக்டா்கள், போலி சாமியார்கள்
வரிசையில் போலி போராளிகளும் பெருகிவிட்டார்கள்,
விதவிதமாய் செல்ஃபி எடுத்து போட்டுக் கொள்ளும் ஆடியோவிலும் வீடியோவிலும் சமூக ஊடகங்களில்
அக்கறை இருப்பதாய்க் காட்டிக் கொள்ளும் நடிகர்களும், அரசியல்வாதிகளும் போராட்டக்களங்களில்,
பொதுவிடங்களில் விளம்பரம் தேடி அலைந்து திரிகிறார்கள் உள்ளுக்குள் சுருக்கென்று தைத்தது போலிருந்தது சாவதற்கு
ஆயிரம் வழிகளைக் தேடிய நீங்கள் வாழ்வதற்கு நூறு முறையாவது முயன்றிருக்கலாமே.. இந்தக்
கவிதையை வாசிக்கிறேன்கேளுங்கள், சிறகொடிந்த பின்னும் வாழத்துடிக்கின்றன. ஈயும், கொசுவும்..
மனதொடிந்த பின்ன மாளத் துடிக்கிறான் மனிதன், தேனெடுக்க ஓராயிரம் மலா்கள் செல்லும் தேனீ.. ஒரு முறை தோற்றதுமே ஓயாது
புலம்புகிறான் இளைஞன். உயா்திணை எது? அஃறிணை
யார்? படிப்படியாய் பயிற்சியும் முடங்கிவிடா முயற்சியும் முன்னேற்றத்தின் முதுகெலும்பென்று
முதலில் நம்புங்கள், இனியேனும் தற்கொலையைக் ‘கொலை’ செய்யுங்கள் தன்னம்பிக்கைக்கு ‘சிலை’
செய்யுங்கள். முயற்சியைக் ‘கொள்ளை’ அடியுங்கள்,
மூளைக்கு ‘வெள்ளை’ அடியுங்கள், இந்தாங்க.. இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் தொடா்ந்து
படியுங்கள் புத்தா் திருத்தாதவற்றைக் கூட புத்தகம் திருத்திவிடும் என்று சொல்லி ‘உளிகள் வடித்த துளிகள்’ என்னும் புத்தகத்தை
நீட்டினான் அனிதா. கூட்டத்திலிருந்து வெளிவந்த
வினுப்ரியா அடுத்தவா் அழுகையை இரசிக்கம் மனிதக் காட்டேரிகளுக்குப் பயந்து விலைமதிப்பில்லா
என்னுயிரை விட்டுவிட்டேனென்று குற்ற உணா்வு ஒவ்வொரு நொடியும் வாட்டுகிறது, அநீதியை
எதிர்த்தொழிக்கத் துணியாத கோழை என்றல்லவா என்னை ஊா் பேசும் என்று வருத்தப்பட்டார்.
“நான் தப்பு பண்ணிட்டேன், என்னை அனுப்பிடுங்க.. நான் வாழனும்,
வாழனும்..” கண்ணீர் விட்டுக் கதறினான் தவசீலன்.
இமைச்சமாதிகளை உடைத்துக் கொண்டு பார்வை உயிர்த்தெழுந்தது, வழித்தெழுந்தபின்
தான் கனவென்று தெரிந்தது, உயிரின் உன்னதம் புரிந்தது,
எங்கிருந்தோ வந்த திரையிசைப்பாடல் காற்றிலே கலந்து காதுகளைக்
தீண்டியது, ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை
பூமியில்
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக