பழமொழியின் உண்மைப் பொருள்
“கல்லைக்
கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக்
காணோம்” என்பது பழமொழி. இது நாயை விரட்ட கல்லைத்
தேடுவதும் கல் கிட்டும் போது நாய் ஓடிவிடுவதையும் குறிப்பதல்ல கல்லிலே கலைவண்ணம் கண்டவீா்கள்
தமிழா்கள் கைதேர்ந்த சிற்பியின் கை வண்ணத்துக்கு வழங்கப் பட்ட சான்றிதழே அப்பழமொழி. கல்லிலே அழகுற வடிக்கப் பட்ட நாயின் சிலையைக் கலைக்கண்ணோடு
நோக்கினால் அங்கே கல் தெரியாது. கல்லை மட்டும்
காண்போருக்கு நாய் வடிவம் தென்படாது.
ஒரு சிற்பின் கை வண்ணத்திற்குத் கிடைத்த
பாராட்டு இன் று நன்றியுள்ள நாயை விரட்டுவதற்கு
உரியதாக பொருள் மருவியுள்ளமை குறக்கத்தக்கது.
-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக