சில பழமொழிகள்
v வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
v வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
v கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்
அதுவே இனிப்பு.
v அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
v உழுகிற நாளில் ஊருக்குப் போனால்,
அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
v இறைக்க ஊறும் மணற்கேணி ஈயப் பெருகும்
பெருஞ்செல்வம்.
v ஏருழுகிறவன் இளப்பமானால் எருது
மச்சான் முறை கொண்டாடும்.
v கள் விற்றுக், கலப்பணம் சம்பாதிப்பதை
விடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
v காய்த்த மரம் கல்அடிபடும்
v முன்னவனே முன் நின்றால் முடியாத
பொருள் உளதோ?
-பெ.குபேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக