தேவையான பொருட்கள்:
1. கவுனியரிசி - 2கப்
2. தேங்காய் - ஒருமூடி
(துருவிக்கொள்ளவும்)
3. நெய்
- 3 டேபிள் மேசைக் கரண்டி
4. சா்க்கரை - அரை கப்
செய்முறை
முதலில் கவுனியரிசியைச் சுத்தம் செய்து
5 டம்ளர் நீரில் முதல் நாள் இரவே ஊற வைக்க
வேண்டும். காலையில் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி அடுப்பில் வைக்கவும். 2 விசில்
வந்ததும் ‘சிம்’மில் 20 நிமிடம் வைத்து இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியவுடன் சர்க்கரை,
நெய், துருவிய தேங்காய் கலந்து சூடாகப் பரிமாறவும்.
-வ.மீனாட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக