எழுத்து வரைவு
1.
அறிந்தான் ஒலியால்: அதன் பெயா் சொன்னான்:
அறியானும் கேட்டான் அதை.
2.
அதையே பலரும் அறிந்து பலுக்க
விதையாய் விளைந்த விரிந்து.
3.
விரிந்து பரவி வினைபெயா் என்னத்
தெரிந்து மொழிந்தான் தெரி.
4.
தெரிந்தவன் சொன்னான்: தெரியானும் தோ்ந்தான்:
வரிந்தான் வாரிகளாய் வாய்த்து!
5.
வாய்த்த மலையே வனையோடே ஏடென்னக்
காய்த்துக் கனிந்ததாம் காண்.
6.
காணவும் காட்டவும் கற்கவும் காலமெலாம்
பேணவும் செய்தான் பெரிது.
7.
பெரிது சிறிதாய் வளைவொடு கீற்று
வரைந்து படித்தான் வளா்ந்து.
8.
வளா்ந்த நிலையில் வரைந்தவை கட்டக்
கிளா்ந்த சுவடியாம் கீற்று.
9.
கீற்றோலைக் கட்டால் கிடைத்த கொடையேதான்
போற்றுதமிழ்ச் செம்மொழிப் பொற்பு.
10.
பொற்புக் குறையாமல் போற்றி உரைகண்டார்
அற்புத்தான் காவல் அரண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக