புதன், 20 பிப்ரவரி, 2019

முகநூல்



                                                                             முகநூல்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சொல்லி வைத்தான் கணியன் அன்று.....
உண்மையாக்கிக் காட்டியது
முகநூல் இன்று!

முகமறியா நட்புக்களின்
இணைவிடம்.....
இதன்  மூலம்
கற்றதும் பெற்றதும்
ஏராளம்!

என்று காண்போம்?
என்று ஏங்கிய பல உறவுகளை
ஒன்றிணைத்த
உலகப் பொது நூல்!

எனினும்
அறிவியல் வளர்ச்சி
நன்மைக்கு மட்டுமல்ல
தீமைக்கும் வழி வகுக்கும்
என்றும் விதிக்கு
முகநூல் மட்டும்
விதிவிலக்கா என்ன?

இளைய சமுதாயத்தின்
நேரத்தை விழுங்குவதில்
முதலிடம்
முகநூலுக்கே!

மனதைக் கெடுக்கும்
பல விடயங்கள்
முகநூலிலும்
உண்டு........

தீமையை விடுத்து
நன்மைகளைக் கைக்கொள்வோமாயின்
முகநுhல் என்றும்
முத்தான
பொக்கிஷமே!

                                                                                                                                                கா.சுபா

அறிவோம்..


                              அறிவோம்..
v          காந்தியடிகளுக்குமகாத்மாபட்டம் கொடுத்தவர் - ரவீந்திரநாத் தாகூர்
v          தாகூருக்குகுருதேவ்பட்டம் கொடுத்தவர் - காந்தியடிகள்
v          காந்தியடிகளுக்குதேசப்பிதா பட்டம் கொடுத்தவர் - சுபாஷ் சந்திரபோஸ்
v          சுபாஷ் சந்திரபோஸீக்குநேதாஜிபட்டம் கொடுத்தவா; - காந்தியடிகள்
v          .வே.சாவுக்குதமிழ்த்தாத்தாபட்lம் கொடுத்தவா; - கல்கி கிருஷ்ணமூர்த்தி
v          கம்பருக்குகவிச்சக்கரவர்த்திபட்டம் கொடுத்தவர் - நாதமுனி
v          ..சிதம்பரனாருக்குகப்பலோட்டிய தமிழன்பட்டம் கொடுத்தவர் - .பொ. சிவஞானம்

                                                                                                                                                தே.தீபா

குறையொன்றும் இல்லை


                      குறையொன்றும் இல்லை

                ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
                இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
                குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
                இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானைப் பாu;த்துப் பின்வருமாறு கேட்டது.
                ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்.
                அதற்கு விவசாயிபானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில் உன் பக்கம் இருக்கும் அழகான G+ச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தொயீயும். அதனால் தான் வழி நெடுக G+ச்செடி விதைகளை விதைத்து விட்டேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரால் இன்று பொயீதாக வளா;ந்து எனக்கு தினமும் அழகான G+க்களை அளிக்கின்றன. இவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள G+க்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்.
                இதைக் கேட்ட பானை கேவலமாக உணா;வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப பற்றிக் கவலைப்படாமல் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

                                                                                                                                                                                                                                சு. லாவண்யா

நகரத்தாரின் கோயில்பணி


                  நகரத்தாரின் கோயில்பணி

                கோயில் உள்ள ஊரில் தான் குடியிருக்க வேண்டும் என்பது பெரியோh; வகுத்த மரபு. ஆனால் குடியிருக்கும் ஊரிலெல்லாம் கோயில் கட்டுவது நகரத்தார் இயல்பு. நகரத்தார் புதிதாகக் குடியேறும் ஊரிலெல்லாம் கோயில் கட்டுவது நகரத்தார் இயல்பு. நகரத்தார் புதிதாகக் குடியேறும் ஊரிலெல்லாம் முதன் முதலில் கோயில் கட்டும் திருப்பணியிலேயே ஈடுபட்டுள்ளார்கள்.
                கி.பி. 1501 ஆம் ஆண்டில் கல்வாச நாட்டில் இளையாத்தன் குடியான் குலசேகரபுரத்திலிருந்து இரணிA+ருக்கு வந்த நகரத்தார்கள். ஓர் அம்மன் கோயிலை அமைத்து வழிபடுவதற்காக இரணிa+ர் மக்களால் கோயில் கட்டுவதற்கான இடம் சுதந்திரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
                நகரத்தார் வாழும் 78 ஊர்களிலும் நகரச் சிவன் கோயிலைக் கட்டியுள்ளனர். அக்கோயில்கள் தொடர்ந்து செயல்பட அறக் கட்டளைகளையும் திருக்குளம் பசுமடம் நந்தவனம் தண்ணீர் பந்தல் தென்னந்தோப்பு நன்செய் புன்செய் நிலங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
                கோயில்களுக்கு அறப்பணி செய்வதற்காகவே நகரத்தார்கள் தங்கள் தொழிலில் இறைவன் பெயரிலும் பங்கு வைத்து அதில் வரும் இலாபத்தைக் கோயில் பணிகளுக்குக்கே செலவிடுகின்றனர். இது தவிர கோயில் பணிகளுக்கே செலவிடுகின்றனர். இது தவிர கோயில் என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பணம் கொடுத்து வருகின்றனர். கும்பாபிடேகம் முதலிய பெரும் பொருட்செலவு வரும்பொழுதுஆஸ்தி வரிஎன்ற பெயரில் தங்கள் சொத்திற்கு ஏற்ற வகையில் (1000 ரூபாய்க்கு 50 பைசா என்ற முறையில்) பெரும் நிதி உதவியினைச் செய்கின்றார்கள்.
                நகரத்தார்கள் தங்களுக்குள் ஒன்பது பிரிவினராக ஒன்பது கோத்திரங்களைக் கொண்டு வாழ்கிறார்கள். அந்த ஒன்பது கோத்திரங்களையும் ஒன்பது கோயிலின் அடிப்படையிலே அமைத்துக் கொள்கின்றனர்.
                இளையாத்தன்குடி> மாத்தூர்> வியரவன்பட்டி> நேமம்> இலுப்பைக்குடி> சூரைக்குடி> வேலங்குடி> பிள்ளையார்பட்டி> இரணிa+u; என்னும் ஒன்பது கோயிலின் அடிப்படையிலேயே திருமணம் முதலியவற்iw மேற்கொள்கின்றனர். இந்த ஒன்பது கோயில்களுக்கும் நகரத்தார்கள் அதிக அளவு பொருள் செலவு செய்துள்ளனர்.
                நகரக் கோயில்களுக்கும் தங்கள் சொந்த ஊயீல் உள்ள கோயில்களுக்கும் உதவியது தவிர தங்களது u;களுக்குப் பக்கத்தில் உள்ள பிற h;களில் உள்ள கோயில் திருப்பணிக்காகவும் 123 தேவாரத் தலங்களிலும் 6 பிரபந்த தலங்களிலும் 33 பிற தலங்களிலும் கோயில் திருப்பணிக்காக இவாu;கள் இவu;கள் பலத் தொண்டுகளைச் செய்துள்ளனu;;.
                இவர்கள் நம் நாடு தவிர இலங்கை> பர்மா> மலேசியா> சிங்கப்g+u; வியட்நாம்> தாய்லாந்து> இந்தோனேசியா> மொhPசியசு நாடுகளிலும் கோயில் திருப்பணிக்காக அதிகமாகச் செலவிட்டு வருகின்றனர். எனினும் நன்கொடையாகக் கொடுத்த பணத்தைக் கூறி விளம்பரமோ தற்பெருமையோ தேடிக் கொள்ள விரும்பாதவu;s;.

                                                                                                                                                                                                                . முத்துமணி


தkpழாயிரம்


25. kpழாயிரம் - உரைநிலை
1.  செப்பின் கலப்பாலில் நச்சுக் கலப்பென்ன
   ஒப்புதல் வேண்டும் உணர்ந்து.
2.  உணர்ச்சி மரத்தtர்க் கோதிய வேதப்
   புணர்ச்சி விளக்கல் Gரி.
3.  புரிந்தால் தமிழ்நெறியைப் புன்னெறி வேத
   புரியர் வழிப்படுத்தhர்  போய்.
4.  போய வழிக்குப் புகுந்தவர் சான்றெல்லாம்
   ஆய தமிழே அறி.
5.  அறிந்தால் அரும்பெறல் ஆசானின் நோக்குச்
   செறிவதற் கில்லை குறை.
6.  குறைவற்ற பேரறிவு கொண்டும் குறுநோக்
   குறைவினால் என்றறிவோம் கோள்.             
7.  கொள்ளரிய பேராற்றல் கொள்வோம்: குறைகளைத்
   தள்ளி மதித்திடுவோம் மேல்.
8.  தகவே பரிமே லழகர் தமையும்
   மிகவே மதித்திடுவோம் மேல்.
9.  மேலில்லா வண்ணமநு மேற்கொண்ட கொள்கையால்
   கோலிய போலியுரை கூறு.
10. கூறுங்கால் நூல்காத்த கோக்கொடையைக் கூறுதல்
   பேறாகும் என்றதைப் பேசு.


தைத்திருநாள்:


                                தைத்திருநாள்
   தி.பி.2049.             தைத் திங்கள்

                                                 தேன்-2.                        துளி-25

                தமிழ்மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.  தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு விழாக்களில் தைத்திருநாள் என்பது முக்கியமான ஒரு விழாவாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனி பெருவிழா.
                ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தைமாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரைஇ பால்இ நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் வைத்துச் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். நமக்குக் காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை சூரியன் விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
                பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல்நாள் போகிப்பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல். நான்காவது நாள் உழவர் திருநாள்.
                மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகிப்பண்டிகையன்று அதிகாலையில் பழைய பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டுக் கொளுத்துவார்கள். வீடு சுத்தமாக்கப்படும் வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
                உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் தை மாதம் முதல் தினத்தில் பொங்கலிட்டு இயற்கையை வழிபடுவார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டுவந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.
                மூன்றாவது நாள் விழா மாட்டுப்பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப்பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.
                நான்காம் நாள் காணும் பொங்கல் விழா ஆகும். இந்நாளில் மக்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் பகிர்ந்து கொள்ளும் நாளாக விளங்குகிறது. தைத்திருநாள் நமது பண்பாட்டை வளர்க்கும் விதமாகவும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அமைகின்றது.
                                                                                                                             தோழமையுடன்,
தேமதுரம் - ஆசிரியா்குழு