புதன், 20 பிப்ரவரி, 2019

முகநூல்



                                                                             முகநூல்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சொல்லி வைத்தான் கணியன் அன்று.....
உண்மையாக்கிக் காட்டியது
முகநூல் இன்று!

முகமறியா நட்புக்களின்
இணைவிடம்.....
இதன்  மூலம்
கற்றதும் பெற்றதும்
ஏராளம்!

என்று காண்போம்?
என்று ஏங்கிய பல உறவுகளை
ஒன்றிணைத்த
உலகப் பொது நூல்!

எனினும்
அறிவியல் வளர்ச்சி
நன்மைக்கு மட்டுமல்ல
தீமைக்கும் வழி வகுக்கும்
என்றும் விதிக்கு
முகநூல் மட்டும்
விதிவிலக்கா என்ன?

இளைய சமுதாயத்தின்
நேரத்தை விழுங்குவதில்
முதலிடம்
முகநூலுக்கே!

மனதைக் கெடுக்கும்
பல விடயங்கள்
முகநூலிலும்
உண்டு........

தீமையை விடுத்து
நன்மைகளைக் கைக்கொள்வோமாயின்
முகநுhல் என்றும்
முத்தான
பொக்கிஷமே!

                                                                                                                                                கா.சுபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக