பழமொழி உண்மைப்பொருள்
புண்பட்ட
மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்றும் மனது புண்பட்டால்
சிகிரெட் குடித்து அதை ஆற்றுவது போலவும் இதற்கு பொருள் கொள்ளப் பெறுகிறது. ஆனால் ஆண், பெண் யாராக இருந்தாலும் வாழ்க்கையில்
துன்பம் வருவது ஆதனால் மனது புண்படுவது இயற்கை நமக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருந்தால் இயல்பாக வாழ்தல் இயலாது எனவே புண்பட்ட மனதை அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிராமல் வேறு
ஒன்றின் பால் (புக விட்டு) செலுத்தினால் மனப்புண் ஆறும் என்பதையே புண்பட்ட
மனதைப் புகவிட்டு ஆத்துதல் என்றனா். இதில்
புகவிட்டு என்பது புகை விட்டு என்றாகி தவறான பொருள் கொள்ள வைத்துள்ளது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக