கஜா பாதிப்புப் பகுதிகளைத் தேசியப் பேரிடா் பகுதியாக அறிவிக்க வேண்டும்
தி.பி.2049.
ஐப்பசித்
திங்கள்
தேன்-2.
துளி-22
கஜா புயலின் காரணமாக கடந்த முப்பதாண்டுகளில் சந்திரத்திராத பேரழிவை தஞ்சை,
நாகை, திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்கள் சந்தித்தனா்.
ஏறத்தாழ 12 மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தினால்
63 போ் பலியாகியுள்ளதாகவும், இலட்சக்கணக்கான தென்னை மரங்கள், விலங்குகள் ழெிந்ததாகவும், 2 ½ இலட்சம்
பேர் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசுத்தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த
பல பகுதிகளில் சீருமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடையாமல் ஒரு மாத காலத்தை எட்டும்
நிலையிலும் பல கிராமங்கிளில் உணவு, குடிநீர், மின்சாரம் வசதி கிடைக்கப் பெறாமலும்,
நோய்த்தொற்று பரவும் ஆபத்திலும் மக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்
உயிரிழிப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பது பல்வேறு அரசியல் கட்சிகளிடத்திலும்,
பொது மக்களிடத்திலும் பெரும் வரவேற்பையும், பாராட்டையம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் பெருந்துயரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகத்தோடு பல்வேறு அரசியல் மற்றும் அரசியல்
சாராத அமைப்புகளுக்கும் தன்னா்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழருக்கும
உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
மரங்களோடு மரங்களாக அடியோடு பெயா்த்தெறியப்பட்டு
உதவி வேண்டி கதறுகிற மக்களின் வாழ்வியலையும் செப்பனிட அரசோடு மக்களும் கைகோர்த்து களத்தில்
இறங்க வேண்டும். அத்துடன் தமிழக அரசு கஜா புயலால்
பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேசிய பேரிடா் பகுதிகளாக அறிவிக்க மைய அரசிற்கு கோரிக்கை
விடுத்து நிவாரண உதவிகளை மக்கள் முழுமையாகப் பெற்றிட தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேமதுரம் கோரிக்கை விடுக்கின்றது.
தோழமையுடன்,
தேமதுரம் - ஆசிரியா்
குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக