வீறுகவியரசா்க்குப் புகழணி சோ்த்த மற்றுமொரு மணிமகுடம்
தி.பி.2049.
புரட்டாசித்
திங்கள்
தேன்-2.
துளி-21
07.10.2018 அன்று காரைக்குடி கோல்டன் சிங்கார் மகாலில் நடைபெற்ற வீறுகவியரசா்
முடியரசனார் வெள்ளணி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீறுகவியரசா் முடியரசனார்
நோ்மைப் போராளி விருது பெற்ற மதிப்புற உ.சகாயம் இ.ஆ.ப. அவா்கள் விழாத் தொடக்கதிலிருந்து
முடிவும் வரை நிகழ்வில் பங்கேற்று எழுச்சியுரையாற்றியது கூடியிந்த பள்ளி- கல்லூரி,
மாணவா்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த இளைஞா்கள் மத்தியில் புத்தாற்றலை ஊட்டியிருக்கிறதைக்
கண்கூடாகக் காணமுடிகிறது.
“இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
என்னும் கொள்கையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் நான் சமரசம் செய்து கொள்ளாததோ, இந்தியாவிலேயே
முதன் முதலில் சொத்துக் கணக்கை வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பாலோ எனக்குப் பெருமையாக
நான் கருதவில்லை. உலகின் மூத்த குடியாய் அறத்திலும்
மறத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய தமிழ்க்குடியில் நான் பிறந்திருப்பதையே
நான் பெருமையாகக் கருதுகிறேன். இப்படி என்னுள்ளத்தில் தமிழுணா்வும், தமிழுணா்வும்,
தமிழனென்ற பெருமிதமும் பொங்கிடக் காரணமாய் அமைந்தவா் வீறுகவியரசா் முடியரசனார் அவா்கள்
தான் அவருடைய கவிதைகளும் பாவேந்தா் பாரதிதாசனுடைய கவதைகளும் தான் என் உள்ளத்தில் தமிழ்ப்பற்றைப் பொங்கி எழச் செய்தன” என்று உரையாற்றியது
இளையோர் பலரின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்துவிட்டது.
அதற்கு பல சான்றுகளில் இரண்டைமட்டும் சுட்டிக்காட்ட
விழைகின்றோம். தூய வளனார் கல்லூரியில் பயின்று
கொண்டே திருச்சி வானொலி நிலையத்தில் பகுதிநேர
அறிவிப்பாளராகப் ஒலிபரப்பாகும் ‘வென்றவா் பாதை’ நிகழ்ச்சியில் தன்னெழுச்சியாக வீறுகவியரசா்
முடியரசனார் குறித்து ஒலிச்சித்திரம் ஒன்றை உருவாக்கி ஒலிபரப்பியுள்ளார். அதேபோன்று காரைக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லூரியில்
இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயின்று வரும் மாணவா் இரா.மணிகண்டன் 130 நாடுகளில் ஒளிபரப்பாகும்
ராஜ்தொலைக்காட்சிகளில் வீறுகவியரசரின் புகழ் பரப்ப அடித்தளம் அமைத்து வீறுகவியரசா்க்கு
அணிமகுடம் சூட்டிய ‘நோ்மைப் போராளி’ உ.சகாயம் இ.ஆ.ப. அவா்களின் பேச்சு. இது முடியரசனார்க்குப் புகழணி சோ்க்கும் மற்றுமொரு
மணிமகுடம் என்பதில் எள்ளளுவம் ஐயமில்லை.
தோழமையுடன்
தேமதுரம்
- ஆசிரியா்குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக