தமிழாயிரம்
21. அடிமைப்பாடல்
1. மேலோர்
பிறப்பென்றார் மற்றோர் அனைவரும்
கீழென்றார்
கீழ்க்கீழ்ப் பகுத்து
2. பகுத்தார்
வருணம், பசியாமல் வாழ
மிகுத்தார், இறங்கப் படி.
3.
படிக்கட்டின் மேலே பளிச்சிட நின்றார்
அடிக்கீழ்
வரிசை அமைத்து
4. அமைத்தார்
அடிக்கடியாய்ப் பஞ்சமரைத் தீண்டார்
தமக்குக்கீழ்
காணாராய்த் தாம்.
5. தாம்வாழத்
தாழாத வானிறையம் தங்களுக்குத்
தாம்.
கண்முன் காட்சிதரும் என்ற.
6. என்றும்
அடிமையாய் எல்லாரும் தாம்கிடக்கக்
குன்றாக
நின்றார், கொழுத்து.
7. கொழுத்தபெரு
வீரரும், கோலொடுங்கி வீழ்ந்தார்,
பழுத்த
சருகாய்ப் படிந்து.
8. பழிப்பழித்தார்,
பண்பா டழித்தார், கைப் புல்லால்
முடித்தார்,
நினைத்தவைஎல் லாம்.
9. ஆமென்னார்
தம்மை அரக்காய் ஆக்கினார்;
ஆமென்றால்
தாசராய் ஏற்று.
10. ஏற்பளித்த
கொத்தடிமை வாழ்விலே எல்லாரும்
தோற்றொழிந்தார்
எல்லாம் தொலைத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக