பாசிப்பருப்பு பக்கோடா
தேவையான
பொருள்கள்
1. பாசிப்பருப்பு - 1கப்
2. பெரிய வெங்காயம் - 2கப்
3. பச்சை மிளகாய் - 3
4. கறிவேப்பிலை - தேவையான அளவு
5. இஞ்சி - அரை இன்ச்
6. தனியா - 1 டீஸ்பூன்
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்
பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சியை துருவிக் கொள்ளவும். பாசிபருப்பு
ஊறியதும் தண்ணீா் வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, உப்பு, சோ்த்து
கரகரப்பாக அரைக்கவும் அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு காய்ந்த
எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாக எடுக்கவும்.
க.கலைச்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக